சென்னை நடுநடுங்க வைத்த கொலை.. ஒரே இரவில் குடும்பத்தை கருவறுத்த கும்பல்.. 3 நாட்களுக்கு பிறகு பெண்ணின் உடல் கண்டெடுப்பு!

Published : Jan 30, 2026, 02:16 PM IST

சென்னை அடையாரில் சாக்குமூட்டையில் கண்டெடுக்கப்பட்ட வடமாநில இளைஞர் உடல் குறித்த விசாரணையில், அவரது மனைவி மற்றும் குழந்தையும் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதை தடுத்ததால் இந்த கொடூர கொலைகள் நடந்துள்ளது.

PREV
14

சென்னை அடையார் இந்திரா நகர் 1வது அவென்யூ சாலையில் உள்ள பிரபல இருசக்கர வாகன ஷோரூம் அருகே கடந்த 26ம் தேதி சாக்கு மூட்டை ஒன்று கிடந்துள்ளது. அதில், ரத்தம் வழிந்து வந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சாக்குமூட்டையை பிரித்து பார்த்தபோது சுமார் 35 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞரின் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

24

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். அதில், ஸ்கூட்டரில் வந்த இரண்டு இளைஞர்கள் சாக்கு மூட்டையை வீசி செல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. மேலும் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

34

இதனிடையே கொலை செய்யப்பட்ட சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்டவர் யார் என்பது தெரியவந்தது. அவரது பெயர் கவுரவ் குமார்(24) என்பதும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கவுரவ் குமார் நெருங்கிய நண்பர் உள்பட 7 பேரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

44

மேலும் கவுரவ் குமாரின் மனைவி, குழந்தையும் காணவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது. பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் கவுரவ் குமாரின் மனைவி, குழந்தையையும் கொன்று விட்டதாக உடல்களை பல்வேறு இடங்களில் வீசியதாக கூறியது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தது. பக்கிங்ஹாம் கால்வாயில் இருந்து 2 வயது குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. பெருங்குடி குப்பை கிடங்கில் கவுரவ் குமாரின் மனைவி முனிதா குமார் உடல் வீசியதை அடுத்து அங்கு தேடும் பணி நடைபெற்றது.

இந்நிலையில் மூன்று நாட்களாக தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில் முனிதா குமார் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த தேடுதல் பணியில் 50 காவலர்கள், 25 மாநகராட்சி ஊழியர்கள் தேடியது குறிப்பிடத்தக்கது. மனைவியை பலாத்காரம் செய்ய முயன்ற கொடூரன்களை தடுக்க முயன்ற போது இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories