அன்புமணி தான் உண்மையான பாமக..? சின்னய்யாவுடன் கூட்டணி அமைக்கும் பாஜக.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published : Oct 17, 2025, 09:03 AM IST

பாமக தற்போது தந்தை, மகன் என இரு அணியாக செயல்படும் நிலையில் பாஜக சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளர் வைஜயந்த் அன்புமணியை சந்தித்து சுமார் 1 மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டார்.

PREV
14
சட்டமன்றத்திலும் தொடரும் பாமக மோதல்

பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை, மகன் இடையேயான மோதல் காரணமாக கட்சி இரு பிரிவாக செயல்பட்டு வருகிறது. பாமக.வில் மொத்தமாக 5 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் சட்டமன்ற குழு தலைவர், கொறடா என இரு பொறுப்புகளையும் எங்கள் தரப்புக்கே வழங்க வேண்டும் என அன்புமணி தரப்பு எம்எல்ஏகள் சட்டமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

24
மாறி மாறி விமர்சித்த தந்தை, மகன்

அண்மையில் ராமதாஸ்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவரை வைத்து சிலர் கண்காட்சி நடத்துவதாகவும், அவரக்கு ஏதாவது ஏற்பட்டால் ஒருவரையும் விடமாட்டேன் என்று அன்புமணி பேசியதை சுட்டிக்காட்டி பேசிய ராமதாஸ், ஆடு மேய்ப்பவன் கூட இப்படி பேசமாட்டான் என்று விமர்சித்து பரபரப்பை கூட்டினார்.

34
திமுக.வுடன் நெருக்கம் காட்டும் ராமதாஸ்

இதனிடையே சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ராமதாஸ் தரப்பு திமுக உடன் நெருக்கம் காட்டி வரும் நிலையில், அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து திமுக அரசை விமர்சித்து வருகிறார். மேலும் அன்புமணி தரப்பு பாஜக, அதிமுக கூட்டணியில் இணைய ஆர்வமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

44
அன்புமணியுடன் கைகோர்க்கும் பாஜக

இந்நிலையில் பாரதிய ஜனதாகட்சியின் தேசியத் துணைத் தலைவரும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளருமான வைஜயந்த் பாண்டா எம்.பி. சென்னை பனையூரில் அமைந்துள்ள அலுவலகத்தில் அன்புமணியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை அன்புமணி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையில் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories