இந்நிலையில், பெங்களூரில் இருந்து நேற்று உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணிக்கு காதல் ஜோடியும் காதலன் குடும்பத்தினரும் அவரது தந்தை டேனியல், தாய் கலையரசி, சித்தப்பா, சித்தி, தங்கச்சி உள்பட 8 பேர் வந்துள்ளனர். அப்போது ராகுலுக்கும் கீர்த்தனாவுக்கும் வேளாங்கண்ணியில் திருமணம் செய்து வைத்தனர். பின்னர் தொடர்ந்து காதலன் குடும்பத்தினர் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் காதல் ஜோடியுடன் தங்கியிருந்தனர். தகவல் அறிந்த பெங்களூரில் இருந்த கீர்த்தனா குடும்பத்தினர் சுமார் 15 பேர் வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் தங்கி இருந்த விடுதிக்குள் புகுந்து காதலன் மற்றும் அவரது குடும்பத்தையும் அரிவாளால் வெட்டி, பெண்ணை தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.