Job Opportunities: வெளிநாடு போகப் போறீங்களா? கை நிறைய சம்பளம்.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

Published : Jul 16, 2026, 10:56 AM IST

Tamilnadu Government: தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL), வெளிநாட்டு வேலை, உயர்கல்வி மற்றும் குடியேற்றம் நாடுவோருக்காக கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தனிப்பட்ட ஆவணங்களுக்கு HRD Attestation மற்றும் Apostille சேவைகளை வழங்குகிறது.

PREV
14

தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏழை எளிய மாணவர்கள, ஆதிதிராவிடர்களுக்கு உதவித்தொகை திட்டமும், இலவச பயிற்சி திட்டமும் நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் அயல் நாட்டில் வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

24

அதில், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நாடுவோருக்கு கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தனிப்பட்ட ஆவணங்களுக்கான HRD Attestation மற்றும் Apostille சேவைகளை வழங்கி வருகிறது. தமிழ்நாடு அரசின் நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL), வெளிநாட்டு வேலைவாய்ப்பு, உயர்கல்வி மற்றும் குடியேற்றம் தொடர்பான தேவைகளுக்காக கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தனிப்பட்ட ஆவணங்களுக்கான சான்றொப்பம் Attestation மற்றும் Apostille சேவைகளை மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நாடுவோர்களுக்காக வழங்கி வருகிறது.

34

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நேரடியாக அணுகும் விண்ணப்பதாரர்களுக்கு, ஒரு சான்றிதழுக்கு சான்றொப்பம் பெற ரூ.900 மற்றும் GST 18% பெறப்படுகிறது. பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கவும் நம்பகத்தன்மையுடனும், வெளிப்படையான முறையிலும் இச்சேவைகளைப் பெறுவதற்காக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை அணுகி பயன் பெறலாம்.

44

எனவே HRD Attestation மற்றும் Apostille சேவைகளைப் பெற விரும்பும் மாணவர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நாடுவோர் மற்றும் பொதுமக்கள், இடைத்தரகர்களைத் தவிர்த்து நேரடியாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களை www.omcmanpower.tn.gov.in மூலமாகவும் அல்லது அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் 9566239685, 6379179200, 044-2250226 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories