முருகன் பக்தர்களுக்கு அடுத்தடுத்து சூப்பர் நியூஸ்! ஆசியாவிலேயே பெரிய 160 அடி சிலை! பழனியில் இந்த கட்டணம் ரத்து

Published : Jan 28, 2025, 09:04 AM IST

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்து, 7 முருகன் கோயில்களில் ரூ.872 கோடி மதிப்பில் பெருந்திட்ட வரைவுப் பணிகள் நடப்பதாகத் தெரிவித்தார்.

PREV
15
முருகன் பக்தர்களுக்கு அடுத்தடுத்து சூப்பர் நியூஸ்! ஆசியாவிலேயே பெரிய 160 அடி சிலை! பழனியில் இந்த கட்டணம் ரத்து
முருகன் பக்தர்களுக்கு அடுத்தடுத்து சூப்பர் நியூஸ்! ஆசியாவிலேயே பெரிய 160 அடி சிலை! பழனியில் இந்த கட்டணம் ரத்து

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து 15 கிமீ தொலைவில் முருகப்பெருமானின் ஏழாவது படைவீடான மருதமலை கோவில் உள்ளது. முற்காலத்தில் கொங்கு வேட்டுவ கவுண்டர் மன்னர்களால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. மருதமலை முருகன் கோயில் தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி (மருதன்) என்றும் அழைக்கப்படுகிறார்.

25
sekar babu

இந்நிலையில் மருதமலை முருகன் கோயிலில், அறநிலையத்துறையின் சார்பில் பல்வேறு திட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இங்கு 160 அடி உயரத்தில் கல்லினால் ஆன முருகன் சிலை அமைக்க அரசு முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஏப்ரல் 04ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். 

35
tiruchendur temple

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு: திமுக ஆட்சியில் இதுவரை 90 முருகன் கோயில்கள் உட்பட 2,400 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. முதல்கட்டமாக 7 முருகன் கோயில்கள் பெருந்திட்ட வரைவுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, திருச்செந்தூர் முருகன் கோயில் ரூ.400 கோடியிலும், பழநி முருகன் கோயில் ரூ.99 கோடியிலும், திருத்தணி முருகன் கோயில் ரூ.183 கோடியிலும், மருதமலை முருகன் கோயில் ரூ.6.50 கோடியிலும், திருவள்ளூர் சிறுவாபுரி முருகன் கோயில் ரூ.16 கோடியிலும், திருச்சி வயலூர் முருகன் கோயில் ரூ.30 கோடியிலும், உதகையின் காந்தல் பகுதியிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் ரூ.16 கோடி மதிப்பிலும் பெருந்திட்ட வரைவுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 7 திருக்கோயில்களில் மட்டும் ரூ.872 கோடி மதிப்பில் பெருந்திட்ட வரைவுப் பணிகள் நடக்கின்றன.

45
maruthamalai murugan temple

முடி காணிக்கை மண்டபம், அன்னதான கூடம் ஆகியவை மருதமலை கோயிலில் ஏற்படுத்தப்பட உள்ளன. முருகன் திருக்கோயில்களில் பக்தர்கள் அதிகரித்து வருவதால் அனைத்து புதிய வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. மருதமலை முருகன் கோயிலில் 2 அடுக்கு லிப்ட் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இப்பணி மே மாதத்துக்குள் நிறைவு பெறும். ஆசிரியாவிலேயே மிகப்பெரிய முருகன் கோவில் மருதமலையில் 160 அடி உயரத்தில் சிலை பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டு, அதற்கான ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 

55
Palani Murugan Temple

அதேபோல் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான சிறப்பு கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டு, 3 நாட்கள் அதாவது பிப்ரவரி 10, 11, 12 ஆகிய தேதிகளில் கட்டணமில்லா தரிசனம் செய்யலாம். திருவிழாவுக்கு வரும் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories