Published : Aug 02, 2024, 10:07 AM ISTUpdated : Aug 02, 2024, 11:31 AM IST
வயநாடு நிலச்சரிவில் சிக்கி 320க்கும் மேற்பட்டவர்கள் இறந்த நிலையில், அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அங்குள்ள பள்ளியில் படித்த பள்ளி சிறுவர்கள் 26 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த 10 தினங்களாக தொடர் மழை பெய்து வந்தது. இந்த மழையின் இறுதி ஆட்டம் தான் கடந்த 29ஆம் தேதி மாலையில் தொடங்கிய மழை இரவு வரை விடாமல் கொட்டியது. இதில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவை ஏற்படுத்தியது. இந்த நிலச்சரிவு முதன் முதலாக முண்டக்கை பகுதியில் தான் தொடங்கியுள்ளது. இந்த நிலச்சரிவால் முண்டக்கைக்கு உட்பட்ட பூஞ்சரிமட்டம் என்ற கிராமத்தில் தான் மலைகளில் இருந்து பாறைகள், மண் துகள்கள் சரிந்து விழுந்துள்ளது.
24
ISRO,Wayanad Landslide,Kerala Landslide
300க்கும் மேற்பட்டவர்கள் பலி
தற்போது அந்த கிராமமே, இருக்கும் இடம் தெரியாமல் மண்ணிற்குள் புதைந்துள்ளது. இந்த பகுதியில் தான் தோண்ட தோண்ட மனித உடல்களாகவே கிடைத்தது. சாளியாற்றில்ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்களை சின்னாபின்னமாக்கியது. தற்போது வரை 316 உடல்களை கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 250க்கும் மேற்பட்டவர்களின் நிலையானது தெரியவில்லை. இதனால் இன்னும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
பல குழந்தைகள் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளனர். முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதியில் நிலச்சரிவில் சிக்கி அந்த பள்ளியில் படித்து வந்த 26 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோரின் நிலையும் தெரியவில்லை. எனவே அங்குள்ள பள்ளியின் ஆசிரியர்கள் மூலமாக குழந்தைகளின் அடையாளர்களை கண்டுபிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 1000க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்ட நிலையில் அவர்கள் தங்களது உறவினர்களின் நிலை தெரியாமல் அலைந்து வருகின்றனர்.
44
wayanad disaster
அதிர்ச்சியில் இருந்து மீளாத குழந்தைகள்
இந்த இடிபாடுகளுக்கு இடையே பல குழந்தைகளும் காயத்தோடு மீட்கப்பட்டுள்ளது. ராணுவத்தினரின் தீவிர நடவடிக்கையால் பலர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்தநிலையில் நிலச்சரிவில் சிக்கிய குழந்தை ஒன்றை ராணுவத்தினர் மீட்டுள்ளனர். கனத்த மனதையும் கரைய வைக்கும் அந்த குழந்தை சிரிப்பு அணைவரையும் கண்ணீர் விட வைத்துள்ளது.இடிபாடுகளுக்கிடையே மீட்கப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.