ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! நீதிமன்றத்தில் கதறிய நாகேந்திரன்! முடியவே முடியாது! கைவிரித்த ஐகோர்ட்!

Published : Feb 04, 2025, 01:33 PM ISTUpdated : Feb 04, 2025, 01:45 PM IST

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

PREV
15
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! நீதிமன்றத்தில் கதறிய நாகேந்திரன்! முடியவே முடியாது! கைவிரித்த ஐகோர்ட்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! நீதிமன்றத்தில் கதறிய நாகேந்திரன்! முடியவே முடியாது! கைவிரித்த ஐகோர்ட்!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதாக கூறப்பட்டு வந்த நிலையில் விசாரணையில் சினிமாவை மிஞ்சும் வகையில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல் வெளியானது.

25
ரவுடி நாகேந்திரன்

அதாவது திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கொலை ஈடுபட்டது தெரியவந்தது. குறிப்பாக கொலைக்கு மூளையாக செயல்பட்டது வடசென்னையின் பிரபல தாதா ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு என்பது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை வழக்கறிஞர்கள் உட்பட 25க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

35
ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு

இதில், சிலர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் குற்றவாளியாக பிரபல ரவுடி தாதா நாகேந்திரனும், இரண்டாவது குற்றவாளியாக ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவும், மூன்றாவதாக நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமனும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். 

45
ன்னை உயர்நீதிமன்றம்

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதில்  நாகேந்திரனுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது மேலும் மோசமாகியுள்ளதால் அவருக்கு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க அனுமதி வழங்க வேண்டும். இதுதொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். ஆனால் அதனை நீதிபதிகள் மறுத்துவிட்டனர். வழக்கு பட்டியலிடப்பட்டால் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

55
ரவுடி நாகேந்திரன்

அதன்படி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஒரே கோரிக்கையுடன் இரு நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்வதை ஏற்க முடியாது என நீதிபதிகள் ரூ.50,000 அபாரத்துடன் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories