Published : Feb 04, 2025, 10:26 AM ISTUpdated : Feb 05, 2025, 11:04 AM IST
தமிழ்நாடு மற்றும் கேரள கடலோரப் பகுதிகளுக்கு தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையம் கள்ளக்கடல் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள், பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் 'கள்ளக்கடல்' எச்சரிக்கை; இந்த 1 நாள் கடல் பக்கம் போயிடாதீங்க!
மிழ்நாடு மற்றும் கேரள கடலோரப் பகுதிகளுக்கு தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையம் கள்ளக்கடல் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது கேரள கடற்கரையில் நாளை (5.2.20205) காலை 5.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை கடல் அலைகள் 0.2 முதல் 0.6 மீட்டர் உயரத்திற்கு எழும்ப வாய்ப்புள்ளது என்றும் தமிழ்நாடு கடற்கரையில் 0.5 முதல் 0.7 மீட்டர் உயரத்திற்கும் அலைகள் சீற்றம் இருக்கும் எனவும் தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையம் (NORC) தெரிவித்துள்ளது.
கள்ளக்கடல் காரணமாக தமிழ்நாடு மற்றும் கேரள கடலோரப் பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மற்றும் கடலோரங்களில் வாழும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கடல் அலைகள் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதால், அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளபடி மக்கள் ஆபத்தான பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், இந்த நேரத்தில் சிறிய படகுகள் மற்றும் படகுகளை கடலுக்குள் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
24
கள்ளக்கடல் எச்சரிக்கை
அதிக அலை மற்றும் கடல் கொந்தளிப்பான காலங்களில் மீன்பிடி படகுகளை கடலில் தரையிறக்குவது, அவற்றை கடலில் செலுத்துவது போலவே ஆபத்தானது. எனவே, அலைகள் பலமாக இருக்கும்போது கடலுக்குள் இறங்குவதையோ அல்லது கரைக்கு அருகில் கொண்டு வருவதையோ தவிர்ப்பது முக்கியம். மேலும் கடற்கரை சார்ந்த சுற்றுலா உட்பட அனைத்து நடவடிக்கைகளிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மீன்பிடி படகுகள் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும். படகுகளுக்கு இடையே பாதுகாப்பான தூரத்தை பராமரிப்பது மோதல் அபாயத்தைத் தவிர்க்கலாம். மீன்பிடி உபகரணங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
கடற்கரைக்குச் செல்வதையும், வெளிப்புற பொழுதுபோக்குகளையும் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 'சரி.. அது என்ன கள்ளக்கடல்? இந்த வார்த்தையையே இப்போது தான் கேள்விப்படுகிறேன்' என நீங்கள் என்னிடம் கேட்கலாம்.
பொதுவாக புயல் காலங்களில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக இருக்கும். இதேபோல் அமாவாசை, பவுர்ணமி போன்ற காலங்களிலும் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். இது நமக்கு முன்கூட்டியே தெரியும். ஆனால் கள்ளக்கடல் என்பது அமைதியாக இருக்கும் கடல் திடீரென சீற்றம் கொள்ளும். அதாவது அதிக காற்று ஏதுமின்றி திடிரென கடல் அலைகள் பல அடி உயரத்துக்கு ஆக்ரோஷமாக எழும்பும்.
44
மீனவர்களுக்கு எச்சரிக்கை
ரொம்ப நேரமாக அமைதியாக இருக்கும் கடல் எந்த வித முன்னறிப்புமின்றி திடீரென சீற்றம் கொள்வதையே கள்ளக்கடல் என அழைக்கிறார்கள். கள்ளக்கடல் நிகழ்வின்போது கடல் எப்போது ஆக்ரோஷம் கொள்ளும், எப்போது அமைதியாக இருக்கும் என்பதை கணிக்க முடியாது. ஆகவே கள்ளக்கடல் விஷயத்தில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.