கடுமையான பனிமூட்டத்தால் ஸ்தம்பித்த சென்னை! ரயில், விமான சேவைகள் பாதிப்பு! பிரதீப் ஜான் சொன்ன முக்கிய தகவல்!
தமிழகத்தில் ஒரு வழியாக வடகிழக்கு பருமழை நிறைவு பெற்றதை அடுத்து இரவு மற்றும் அதிகாலையில் கடுமையான பனி நிலவுவதும், பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைப்பதுமாக இருந்து வருகிறது. கடந்த 4 நாட்கள் கடுமையான வெயில் சூட்டெரிப்பதால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்வதற்கே அஞ்சுகின்றனர். இதனிடையே இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
25
கடுமையான பனிமூட்டம்
இந்நிலையில் எப்போதும் இல்லாத வகையில் தமிழகம் முழுவதும் இன்று கடுமையான பனிமூட்டம் நிலவியது. அதுவும் குறிப்பாக சென்னையில் சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம் பாக்கம் உள்ளிட்ட புறநகர் முழுவதும் பனி சூழ்ந்துள்ளதால் வாகன ஒட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனர்.
35
ரயில்சேவை பாதிப்பு
கடுமையான பனிமூட்டம் காரணமான ரயில் சேவை, விமான சேவை பாதிக்கப்பட்டது. அதாவது எதிரில் வரும் ஆட்களே தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு உள்ளதால் செங்கல்பட்டில் இருந்து கடற்கரை மார்க்கமாக செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் 10 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
45
விமான சேவை பாதிப்பு
அதேபோல் சென்னை விமான நிலையத்தில் 25க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். சென்னையில் தரையிறங்க வேண்டிய 6 விமானங்கள் பெங்களூரு, திருவனந்தபுரம், ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. குவைத்தில் இருந்து 148 பயணிகளுடன் வந்த விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் தொடர்ந்து வானில் வட்டமடித்து வருகிறது. இந்நிலையில் அடர்ந்த பனிமூட்டம் நாளையும் தொடரும் என பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
55
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: வட தமிழ்நாட்டில் அடர்ந்த பனிமூட்டம் நாளையும் இதுபோன்ற பனிமூட்டத்தை எதிர்ப்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.