தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்வோருக்கு பரிசுகள் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் பயணச்சீட்டுகள் குலுக்கலுக்கு தகுதி பெறும்.
பொதுமக்களுக்கு 50ஆயிரம் ரூபாயை அள்ளித்தரும் போக்குவரத்து துறை
சொந்த ஊருக்கு பயணம் செய்வதற்கும், பணி தொடர்பாக வெளியூர் பயணம் செய்வதற்கும் எந்த நேரத்திலும் பெரிதும் உதவியாக இருப்பது பேருந்துகள். பஸ் ஸ்டாண்ட் சென்றால் போதும் பேருந்துகள் வரிசையாக நிற்கும். அதிலும் கட்டணம் குறைவாக பயணம் செய்வதற்கு அரசு பேருந்துகள் உதவியாக உள்ளது.
தனியார் பேருந்துகளை விட பல மடங்கு கட்டணம் குறைவாக இருக்கும். இந்த நிலையில் பேருந்தில் குறைவான கட்டணத்தில் பயணம் செய்தும், பரிசுகளையும் அள்ளிக்கொடுத்து வருகிறது. தமிழக போக்குவரத்து கழகம் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
25
அரசு பேருந்தில் பயணம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொலை தூர பேருந்துகளில், பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றி பயணம் செய்ய ஏதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வலைதளமான https://www.tnstc.in. TNSTC செயலி etc.. மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் முறை செயல்பட்டு வருகின்றது.
அந்த வகையில் பயணிகளை அரசு பேருந்தில் பயணிக்க ஊக்குவிக்கும் வகையில் வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிகள் எளிதாக பயணம் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
35
குலுக்கல் முறையில் பரிசுகள்
ஒவ்வொரு மாதத்திலும் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து, இதர நாட்களில் பயணிப்பதற்காக, முன்பதிவு செய்யும் பயணிகளில் 3 பயணிகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு,
3 பயணிகளுக்கு தலா 10,000 ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு ஜனவரி முதல் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை விரிவுப்படுத்தும் வகையில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயனடைய வேண்டும் என்ற நோக்கில்,
45
பேருந்து பயணிகளுக்கு 50ஆயிரம் பரிசு தொகை
கடந்த ஜூன் மாதம் முதல் 13 பயணிகளை கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, முதல் மூன்று பயணிகளுக்கு தலா 10,000 ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. இதர பத்து பயணிகளுக்கு தலா ரூ.2,000/- வழங்கிட முடிவு செய்யப்பட்டு, அமுல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, 2024 நவம்பர் மாதம் முதல், வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் அனைத்து பயணச்சீட்டுகளும் மாதாந்திர குலுக்கல் முறைக்கு தகுதி பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
55
வெற்றியாளர்கள் யார்.?
இதனை நடைமுறைபடுத்தும் வகையில், ஜனவரி-2025 மாதத்திற்கான பதிமூன்று (13) வெற்றியாளர்களை (பயணிகள்) கணினி குலுக்கல் முறையில், மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை) மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், தேர்வு செய்தார்.