இதை உடனே செய்யுங்க! ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் செக் வைக்க பறந்த முக்கிய உத்தரவு!

Published : Feb 04, 2025, 08:01 AM ISTUpdated : Feb 04, 2025, 09:13 AM IST

தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடங்கள் தமிழ், ஆங்கில வழியில் அனிமேஷன் காணொலிகளாக மாணவர்கள் எளிதில் புரியும் விதமாக வழங்கப்பட்டுள்ளன.

PREV
16
இதை உடனே செய்யுங்க!  ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் செக் வைக்க பறந்த முக்கிய உத்தரவு!
இதை உடனே செய்யுங்க! ஒவ்வொரு ஆசிரியர்களுக்கு செக் வைக்க பறந்த முக்கிய உத்தரவு!

கல்வி தான் மாணவர்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்காக மத்திய, மாநில பல்வேறு சூப்பர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை எமிஸ் EMIS (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் அடிப்படையான விவரங்கள், கல்வி உதவித்தொகை, மதிப்பெண்கள், அரசின் நலத்திட்ட உதவிகள், கலை திருவிழாக்களில் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பதிவேற்றம் செய்யப்படுகிறது. 

26
களஞ்சியம் செயலி

அதேபோல் அரசு ஊழியர், ஆசிரியர்கள் விடுப்பு, சரண்டர் விடுப்பு, பே சிலிப் பதிவிறக்கம், பி.எப். உள்ளிட்ட பணப் பலன்கள் நிலரவம் என அனைத்து விவரங்களும் களஞ்சியம் (Kalanjiyam)செயலியில் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் அரசு பள்ளிகளில் உள்ள ஸ்மார்ட் போர்டுகளில் மணற்கேணி செயலி பயன்படுத்தப்படுகிறதா என்பதை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: பொதுத்தேர்வு தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தியை வெளியிட்ட தேர்வுத்துறை!

36
தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம்

இதுதொடர்பாக அனைத்து மாவட்டக்  கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்:  தமிழகத்தில் கணினி சார்ந்த புதிய அறிவியல் தொழில்நுட்பங்களுடன் கற்றல் செயல்பாட்டுக்கு பெரிதும் உதவும் வகையில் மணற்கேணி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடங்கள் தமிழ், ஆங்கில வழியில் அனிமேஷன் காணொலிகளாக மாணவர்கள் எளிதில் புரியும் விதமாக வழங்கப்பட்டுள்ளன.

46
ஸ்மார்ட் போர்டு

இந்நிலையில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திறன் பலகைகள் (ஸ்மார்ட் போர்டு) நிறுவப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பலகைகளில் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் உட்பட அனைத்து வகை ஆசிரியர்களும் தங்கள் பெயர் அல்லது செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். 

இதையும் படிங்க: பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை! வெளியானது சூப்பர் அறிவிப்பு!

56
மணற்கேணி செயலி

அதன் பின்னர் அன்றைய வகுப்பறை குழலுக்கு ஏற்ற பாடங்களை தேர்வு செய்து கற்றல், கற்பித்தல் செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டும். இதுதவிர தொடக்கப் பள்ளிகளில் மணற்கேணி செயலியை வகுப்பறைக் கற்பித்தலுக்கு ஆசிரியர்கள் பயன்படுத்தி வருகின்றனரா என்பதை அனைத்து அலுவலர்களும் பள்ளி ஆய்வுகளின் போது கண்காணிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு ஆசிரியரும் மணற்கேணி செயலியை திறன் பலகைகள் மூலம் பயன்படுத்தி வருவதை செல்போனில் படம்பிடித்து அதை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

66
புதிய கல்வி கற்கும் முறை

நவீன காலத்திற்கு ஏற்ப கல்வி கற்பித்தல்  முறையும் மாறி மாறி வருகிறது. அதற்கு ஏற்ப ஆசிரியர்களும் புதிய கல்வி கற்கும் முறை தொடர்பாக அவ்வப்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Read more Photos on
click me!

Recommended Stories