காலையிலேயே பொதுமக்களுக்கு வந்த அதிர்ச்சி செய்தி! பால் விலை மீண்டும் உயர்வு!

Published : Feb 04, 2025, 10:31 AM ISTUpdated : Feb 04, 2025, 10:52 AM IST

தமிழகத்தில் திருமலா, ஜெர்சி பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியுள்ள நிலையில் ஆரோக்கியாவும் பால் விலையை உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
14
காலையிலேயே பொதுமக்களுக்கு வந்த அதிர்ச்சி செய்தி!  பால் விலை மீண்டும் உயர்வு!
காலையிலேயே பொதுமக்களுக்கு வந்த அதிர்ச்சி செய்தி! பால் விலை மீண்டும் உயர்வு!

தமிழகத்தில் அரசு நடத்தி வரும் ஆவின் பால் மட்டுமின்றி ஆரோக்கியா, திருமலா, ஸ்ரீனிவாசா, டொட்லா, ரூசி, ஜெர்சி பால், நந்தினி, அமுல் உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, தினமும் சுமார் 18 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டில் அரசு விற்பனை செய்கிறது. ஆனால் தனியார் நிறுவனங்கள் சுமார் 1.50 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது தங்களின் விருப்பதற்கு ஏற்றவாறு பால் விலையை உயர்த்தி வருகின்றனர். 

24

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆந்திராவைச் சேர்ந்த முன்னணி தனியார் பால் நிறுவனமான திருமலா பால் நிறுவனமும், ஜெர்சி பால் நிறுவனமும் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் வரை உயர்த்தியது. தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 5 ரூபாய் வரையிலும் உயர்த்தியது. இந்நிலையில் ஆரோக்யா பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. 

34
Arokya Milk

இந்நிலையில், ஆரோக்கியா நிறுவனம் தனது ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி 71 ரூபாய்க்கு இன்று முதல் விற்பனை செய்து வருகிறது.

44
Arokya Milk

இதேபோல், அரை லிட்டர் பாக்கெட் விலை, 37 ரூபாயிலிருந்து 38 ரூபாயாகவும், தயிர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆரோக்கியா நிறுவன பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டதால், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். வரும் நாட்களில் டொட்லா,  ஸ்ரீனிவாசா உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் பால் விலையை உயர்த்துகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த பால் விலை உயர்வுக்கு பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

click me!

Recommended Stories