ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அஸ்வத்தாமன், அஞ்சலை, ஹரிஹரன், அப்பு, முகிலன் உள்ளிட்ட 12 பேருக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன்.
கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டின் அருகே கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 29 பேர் மீது காவல்துறை குற்றம் சாட்டினர்.
24
ஏ1 குற்றவாளி நாகேந்திரன் உயிரிழப்பு
இதில் 27 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் திருவேங்கடம் என்பவர் மட்டும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மேலும் சம்போ செந்தில் உள்ளிட்ட இரண்டு பேர் தலைமறைவாக இருந்து வருகின்றனர். இந்த வழக்கில் ஏ1 குற்றவாளியான நாகேந்திரன் சமீபத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
34
12 பேருக்கு ஜாமீன்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில் இந்த வழக்கு விபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. பின்னர் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனிடையே இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான அஸ்வத்தாமன், அஞ்சலை, ஹரிஹரன், அப்பு, முகிலன் உள்ளிட்ட 12 பேருக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் காவல்துறை தரப்பில் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் பெற்ற அஸ்வத்தாமன், அஞ்சலை, ஹரிஹரன், அப்பு உள்பட 12 பேருக்கும் ஜாமீன் ரத்து செய்வதாக தெரிவித்தார். இவர்கள் அனைவரும் மார்ச் 6ம் தேதி சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.