பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வந்தாமனின் தந்தையும், பிரபல தாதாவுமான நாகேந்திரன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நாகேந்திரன், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; உயிருக்கு போராடும் குற்றவாளி நாகேந்திரன்- நடந்தது என்ன.?
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த வருடம் ஜூலை மாதம் அயனாவரம் பகுதியில் புதிதாக கட்டிவரும் வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய திருவெங்கடம் உள்ளிட்ட 11 பேர் சரண் அடைந்தனர் அவர்களிடம் போலீசார் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அதில்ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிவாங்கும் வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்த்தாக கூறினர். ஆனால் ஆம்ஸ்ட்ராங் கொலை இதற்காக நடக்கவில்லையெனவும் கொலையின் பின்னனியில் பல்வேறு நபர்கள் இருப்பதாக ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
25
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னனியில் யார்.?
இதனையடுத்து சரண் அடைந்த திருவேங்கடத்தை போலீசார் என்கவுண்டர் செய்த நிலையில், மற்ற குற்றவாளிகள் கொலைக்கான காரணத்தை தெரிவித்தனர். அதன் படி ஆம்ஸ்ட்ராங் கொலையில் திமுக, அதிமுக, காங்கிரஸ்,பாஜக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சியில் தொடர்புடையவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 25க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
35
முதல் குற்றவாளி நாகேந்திரன்
இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் காங்கிரஸ் நிர்வாகியான அஸ்வந்தாமன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் இடையே நடைபெற்ற மோதல் காரணமாக அஸ்வந்தாமனின் தந்தையும் பிரபல தாதாவுமான நாகேந்திரன் சிறையில் இருந்து ஆம்ஸ்டராங்கை கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டது தெரியவந்தது.
இதனையடுத்து நாகேந்திரன் முதல் குற்றவாளியாக இந்த கொலை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் உடல் நல குறைவு ஏற்பட்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
45
நாகேந்திரன் உடல்நிலை பாதிப்பு.?
இந்த நிலையில் நாகேந்திரன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிசிக்சை பெற அனுமதிக்க கோரியும், தற்போதைய உடல் நலன் குறித்த மருத்துவ அறிக்கையை வழங்க உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திக்கேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நாகேந்திரன் தரப்பு வழக்கறிஞர் பாலாஜி ஆஜராகி, வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாகேந்திரனின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
55
நீதிபதி விசாரிக்க உத்தரவு
எனவே நாகேந்திரனை உடனடியாக சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி நாகேந்திரன் உடல் நிலை குறித்து வேலூர் மாவட்ட நீதிபதி, மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை செய்து அறிக்கை அளிக்க நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.