Published : Feb 19, 2025, 01:09 PM ISTUpdated : Feb 19, 2025, 01:11 PM IST
தமிழக அரசு TNPSC Group IV தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சியில், திறமையான பயிற்றுநர்கள், பாடக்குறிப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் வழங்கப்படும்.
Tnpsc குரூப் 4 தேர்வர்களுக்கு குட் நியூஸ்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
படித்த படிப்பிற்கு வேலை தேடி லட்சக்கணக்கான இளைஞர்கள் பல இடங்களுக்கு சென்று வருகிறார்கள். அந்த வகையில் தனியார் துறையில் கிடைக்கும் வேலையில் இணைகிறார்கள். அதே நேரத்தில் அரசு பணி ஒன்றே இலக்கு என கூறி லட்சக்கணக்கான இளைஞர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். வசதி படைத்த இளைஞர்கள் தனியார் மூலம் நடத்தப்படும் பயிற்சிக்கு சென்று பயில்கிறார்கள். ஆனால் ஏழை எளிய இளைஞர்களால் பணம் கட்டி பயிற்சி முகாம் செல்லமுடியவில்லை.
25
அரசு பணிக்கான குரூப் 4 தேர்வு
இதனையடுத்து தமிழக அரசு சார்பாக இலவசமாக பயிற்சி முகாமை ஏற்பாடு செய்து பயிற்சி வழங்கி வருகிறது. இது தொடர்பான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன் படி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல்,
பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல் போட்டித் தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள், கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
35
மாணவர்களுக்கு இலவச பயிற்சி
இதனில் போட்டிதேர்வுகளுக்கு, திறமையான, அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பாடக்குறிப்புகள், தினசரி, மாத இதழ்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவை வழங்கப்படுவதுடன் பாடவாரியான துணைத் தேர்வுகள், மாதிரித் தேர்வுகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பொருள் தொடர்பில், TNPSC GROUP IV போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளானது திங்கள் வெள்ளி வரையிலான அனைத்து வேலைநாட்களிலும் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெற்று வருகின்றது.
45
தமிழக அரசு சார்பாக பயிற்சி வகுப்புகள்
தற்போது நடத்தப்படவுள்ள பயிற்சி வகுப்பின் விவரங்கள் பின்வருமாறு:
பயிற்சி வகுப்பு
TNPSC GROUP IV
பயிற்சி வகுப்பின் நேரம்
முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை
எனவே, மேற்காணும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையுமாறு மாநில தொழில்நெறி வழிகா ட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.