ஒரே நேரத்தில் 10ஆயிரம் பேருக்கு வேலை.! ஆசிரியர்களே ரெடியா.? வெளியான அசத்தலான அறிவிப்பு

Published : Feb 18, 2025, 08:31 AM ISTUpdated : Feb 18, 2025, 09:53 AM IST

பிப்ரவரி 22 ஆம் தேதி சென்னையில் 10,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பல்வேறு பாடங்களுக்கான ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர், துணை முதல்வர் மற்றும் பிற பணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெறும்.

PREV
15
ஒரே நேரத்தில் 10ஆயிரம் பேருக்கு வேலை.! ஆசிரியர்களே ரெடியா.? வெளியான அசத்தலான அறிவிப்பு
ஆசிரியர்களே ரெடியா.? ஒரே நேரத்தில் 10ஆயிரம் பேருக்கு வேலை.!

மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. அந்த வகையில் மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கு ஆசிரியர்களே அடித்தளமாக உள்ளனர். அந்த வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. மேலும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகிறது.  மேலும் வெளியூர்களுக்கு மாறுதல் கேட்கும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி மாறுதல் வழங்கப்படுகிறது. இந்த நிலையில்தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் நடைபெறவுள்ளது.

25
சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்

இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. அந்த வகையில் வருகிற பிப்ரவரி 22ம் தேதி சென்னையில் நேர்காணல் நடைபெறுகிறது. சென்னை, மதுரவாயல் அருகே உள்ள ஆலப்பாக்கத்தில் உள்ள சீமத்தம்மன் நகர் பிரதான சாலையில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், இணை ஒருங்கிணைப்பாளர், நீட், ஐஐடி, ஜீ தேர்வு பயிற்சியாளர்கள், பல்வேறு பிரிவு ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்புக்கான முகாம் நடைபெறவுள்ளது. 

35
ஆசிரியர்கள் காலிப்பணியிடம்

 

11 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கான தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல், வணிகவியல், பொருளாதாரம், கணக்குப்பதிவியல், வர்த்தக கணக்கு, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், உயிரியல், தாவரவியில், விலங்கியல், வரலாறு பாடங்களை எடுக்கும் ஆசிரியர்களுக்கான  மொத்த பணியிடங்கள் 6548

9மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பல்வேறு பிரிவு பாடங்களை எடுக்கும் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல், வணிகவியல், பொருளாதாரம், கணக்குப்பதிவியல், வர்த்தக கணக்கு, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், உயிரியல், தாவரவியில், விலங்கியல், வரலாறு - மொத்த பணியிடங்கள் 3225

45
சுமார் 10ஆயிரம் பணியிடங்களுக்கு தேர்வு

6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும் நடத்த மொத்த பணியிடங்கள் - 955 , தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்: தமிழ், ஆங்கிலம், இந்தி, கணக்கு, அறிவியல், சமூக அறிவியல், கணினி அறிவியல் - 1026, உடற்கல்வி, இந்தி, யோகா, இசை, கராத்தே, நடனம், தொழிற்கலை - சிறப்பு ஆசிரியர்கள் - 125 பணியிடங்களுக்கும், அங்கன்வாடி ( கிண்டர்கார்டன்) அனைத்து பாடங்கள்( ஏதாவது ஒரு பட்டப்படிப்பு) - 1265 பணியிடங்களுக்கும் நேர்காணல் நடைபெறவுள்ளது.

55
கூடுதல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள

இதே போல கல்லூரி முதல்வர், துணை முதல்வர், இணை ஒருங்கிணைப்பாளர், நீட், ஐஐடி, ஜீ தேர்வு பயிற்சியாளர்கள் -  698 பணியிடங்களுக்கும் பணியாளர் தேர்வுக்கான நேர்காணல் நடைபெறவுள்ளது.  ஆசிரியர் பணிக்கான சிறப்பு நேர்காணல் தொடர்பான விவரங்களுக்கு  : 8248470862 / 9442568675 / 8015343462 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் 

Read more Photos on
click me!

Recommended Stories