நமது எதிரி இவர்கள் தான்! திமுகவுக்கு வேலை பார்க்கும் அண்ணாமலை! இறங்கி அடித்த ஆதவ் அர்ஜூனா!
Aadhav Arjuna: தமிழக வெற்றிக் கழகம் பொதுக்குழுவில் விஜய் இனி வெற்றித் தலைவர் என அழைக்கப்படுவார் என ஆதவ் அர்ஜுனா பேசினார்.
Aadhav Arjuna: தமிழக வெற்றிக் கழகம் பொதுக்குழுவில் விஜய் இனி வெற்றித் தலைவர் என அழைக்கப்படுவார் என ஆதவ் அர்ஜுனா பேசினார்.
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில்: விஜய் இனி தளபதி இல்லை வெற்றித் தலைவர் என அழைக்க வேண்டும். அரசியலுக்காக வருமானத்தை விட்டவர் விஜய். எந்த தீய சக்தியை எதிர்த்து எம்ஜிஆர் கட்சி தொடங்கினாரோ அதே இடத்தில் ராமசந்திரன் பெயரில் உள்ள மண்டபத்தில் தவெக பொதுக்குழுவை தொடங்கியுள்ளோம்.
இது வொர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் இல்லை. எம்.ஜி.ஆரை இழிவு செய்ததால்தான் அவரது ஆட்சியில் நீங்கள் வொர்க் பிரம் ஹோமில் இருந்தீர்கள். திமுகவின் ஒட்டுமொத்த அமைச்சரவையும் ஓய்வுக்கு தயராக வேண்டும். உங்களை வீட்டுக்கு அனுப்பப்போகும் அரசியல் இது. உங்களுக்கு எல்லாம் ஓய்வு கொடுக்கவே நாங்கள் தயாராகி கொண்டிருக்கிறோம். நமது எதிரி திமுக, பாஜகவும் தான் என்பதில் தெளிவாக சென்று கொண்டிருக்கிறோம். பிரசாத் கிஷோர் வருகை தொடர்பாக திமுக பொய் பிரசாரம் செய்து வருகிறது. தேர்தல் வியூக நிறுவனங்கள் மூலம் திமுக எதிர்க்கட்சிகளை உடைப்பது குறித்து பல்வேறு வியூகங்களை வகுக்கிறார்கள். அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி சம்பாதித்தால் அது ஊழல் தான்.
இதையும் படிங்க: தவெக பொதுக்குழு கூட்டம்! டாஸ்மாக் முறைகேடு உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்! இதோ முழு விவரம்!
திமுகவிற்காக வேலை பார்க்கிறார் அண்ணாமலை. அண்ணாமலை மோடிக்கு உண்மையாக இருக்க வேண்டும். அண்ணாமலையை செட் செய்து திமுக வைத்துள்ளது. புலி அமைதியாக இருக்கும்போது ஆடு வந்து சம்பந்தம் இல்லாமல் பேசுகிறது. டெல்லியில் மோடியும், தமிழகத்தில் அண்ணாமலையும் பல்வேறு அரசியல் விஷயங்களை திசை திருப்புகிறார்கள். பெண்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் போது சாட்டையால் அடித்து கொண்டு திசைதிருப்ப முயற்சி.
எங்கள் கட்சியையும் தலைவரையும் தொட்டால் உங்கள் உண்மை முகத்தை வெளிகாட்டுவோம். இளைஞர்கள் கூட்டம் 2026 இல் புதிய முடிவெடுக்கும். அண்ணா திமுகவை உருவாக்கிய போது இளைஞர்கள் மட்டும்தான் கட்சியில் இருந்தார்கள். தவெகவில் சாதி கிடையாது, திமுக தான் சாதியை வைத்து அரசியல் செய்கிறது. அண்ணாவின் குறிக்கோள்களை நிறைவேற்றும் ஒரே தலைவர் விஜய் தான் என ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளார்.
இதையும் படிங்க: ஒரே போஸ்டர்! நான் முதலமைச்சரா பதறிய புஸ்ஸி ஆனந்த்! அலறிய மாவட்டச் செயலாளர்! நடந்தது என்ன?