சென்னையில் கலக்க வருகிறது மின்சார பேருந்து.! எப்போது இயக்கப்படும்- வெளியான சூப்பர் தகவல்
சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 625 பேருந்துகள் மே மாதம் முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளன. இதில் பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ளன.
சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 625 பேருந்துகள் மே மாதம் முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளன. இதில் பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ளன.
Chennai's Electric Bus Introduction: Sivasankar's Inspection Update! வந்தோரை வாழவைக்கும் சென்னையை சுற்றி பல ஆயிரம் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளது. எனவே இதன் காரணமாகவே சென்னையில் மட்டும் கோடிக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டும் வருகிறது.
குறிப்பிட்ட இடத்திற்கு பேருந்தில் செல்ல பல மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். அதே நேரம் தமிழக அரசின் பேருந்து சேவையால் ஏழை மற்றும் எளிய மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள்.
மின்சார பேருந்துகளுக்கு ஒப்பந்தம்
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பாஸ், முதியோர்களுக்கு இலவச பயண சீட்டு போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நவீன கால கட்டத்திற்கு ஏற்ப தொழில் நுட்பங்களும் மாறி வருகிறது. அந்த வகையில் சென்னையில் மின்சார பேருந்துகளை இயக்க திட்டங்கள் வகுக்கப்பட்டது.
இதற்காக ஜெர்மனி வங்கியின் நிதி உதவி கீழ் மாநகரப் போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த முறையில் மின்சார பேருந்துகளை இயக்குவதற்காக டெண்டர் விடப்பட்டது. இதனையடுத்து இதற்கான சிறப்பு பேருந்துகள் தயாரிக்கும் பணி சென்னையில் தீவிரமாக நடைபற்றது. தற்போது பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
மின்சார பேருந்து சோதனை
இதனிடையே போக்குவரத்துத் துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள மின்சார பேருந்தின் மாதிரி பேருந்தை, சென்னை எண்ணூரில் அமைந்துள்ள ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
முதல் கட்டமாக ஏசி மற்றும் குளிர்சாதன வசதி இல்லாத பேருந்து என 625 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பேருந்துக்கான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் ஒப்புதல் வழங்கியவுடன் மே மாதம் முதல் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மின்சார பேருந்து எப்போது இயக்கம்,?
இந்த மின்சார பேருந்தில் பல்வேறு சிறப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் படி, 35 இருக்கைகளை கொண்டிருக்கும் இந்த பேருந்தில், அலாரம் வசதி, மின்னேற்றம் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கை உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மின்சார பேருந்து என்பதால் சென்னையில் உள்ள அடையாறு, அயனாவரம் உள்ளிட்ட ஐந்து பணிமனைகள் நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.