நாவடக்கம் இன்றி திரியும் திமுக..! முதல்வரின் இந்து விரோத மனநிலை நிரூபனமாகியுள்ளது.. அண்ணாமலை ஆவேசம்

Published : Jan 07, 2026, 08:56 AM IST

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகளின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதற்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

PREV
13
சுடுகாட்டுடன் ஒப்பிடுவதா..?

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கும் பெயரில், “சுடுகாட்டில்தான் பிணத்தை எரிக்க வேண்டும்; பழக்க வழக்கங்களை மாற்றக் கூடாது” என்று திமுக அமைச்சர் ரகுபதி பேசியிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

23
இந்து விரோத மனநிலை..

நூற்றாண்டுகளாக நிலவி வரும் தமிழக மக்களின் ஆன்மீக மரபுகளை அவமதிப்பதும், ஹிந்து மத மக்களின் வழிபாட்டு உரிமை, பண்பாடு என இவை அனைத்தையும், முதலமைச்சர் உட்பட திமுகவினர் தொடர்ந்து கேலி செய்து வருவதும், திமுக அரசின் ஹிந்து மத விரோத மனநிலையை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

33
நாவடக்கம் இன்றி திரியும் திமுக..

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுகவினர் செயல்பாடுகளை, மாண்புமிகு நீதிமன்றம் சுட்டிக் காட்டினால், நீதிமன்றத் தீர்ப்பையே அவமதிக்கின்றனர். நாவடக்கம் இன்றித் திரியும் திமுகவினருக்கு, தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories