சிபிஎஸ்இ-யின் இந்த திடீர் அறிவிப்புக்குத் கண்டனம் தெரிவித்து, தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் அண்ணாமலை, கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் சிபிஎஸ்இ அமைப்பு, மாணவர்களுக்கு 6-ஆம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அதில் இரண்டு இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தது. இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட இலக்கிய மற்றும் கலாசார பாரம்பரியத்தைச் சிறு வயதிலேயே குழந்தைகள் அறிந்து கொள்ள இது உதவும் என்பதால், அந்த முடிவை நான் வரவேற்றேன்.
ஆனால், அந்த அறிவிப்பில் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியைக் கட்டாயமாக்கும் திட்டம், இன்றிலிருந்து மூன்று ஆண்டுகள் கழித்து, அதாவது 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் என்று மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.