சென்னையின் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல் முதல் கோயம்பேடு பரங்கிமலை வழியாக விமான நிலையம் வரையிலும், விம்கோ நகர் முதல் சென்னை சென்ட்ரல், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி வழியாக விமான நிலையம என பல்வேறு வழித்தடங்கலில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி சென்னையின் மற்ற பகுதிகளையும் இணைக்கும் வகையில் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.
விமான நிலையங்களை பொறாமைப்பட வைக்கும் சென்னை மெட்ரோ
சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் அமைந்துள்ளன. இதுமட்டுமின்றி மழை, வெள்ளம் போன்ற காலங்களில் மெட்ரோ ரயில்கள் பெரிதும் கைகொடுத்து உதவுகின்றன. இதன் காரணமாக மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தினமும் ஏராளமானோர் பயணித்தாலும் சென்னை மெட்ரோ ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள் மிகவும் சுத்தமாக பரமாரிக்கப்படுகின்றன. விமான நிலையங்களே பொறாமைப்படும் அளவுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் சுத்தமாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.