தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து சந்தித்து பேசியது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கடந்த நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொண்டனர். ஆனால் இந்த கூட்டணிக்குள் அதிமுக இடம் பெற்ற பின்னர் கூட்டணியில் தங்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என குறிப்பிட்டு அமமுகவும் கூட்டணியில் இருந்து வெளியேறினர்.
24
மீண்டும் கூட்டணியில் இணையும் தினகரன்..?
முதல்வர் வேட்பாளரை மாற்றாத பட்சத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வாய்ப்பே இல்லை என டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமையும் பட்சத்தில் அது திமுகவுக்கு கடும் சவாலாக இருக்கும். அதிமுகவால் திமுகவை வீழ்த்த முடியாது என்று உறுதியாக தெரிவித்து வருகிறார்.
34
விஜய் தலைமையில் கூட்டணி..?
இதனால் விஜய் தலையைில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை ஓபிஎஸ் ஆதரவாளரின் இல்ல திருமண விழாவில் அண்ணாமலையும் பங்கேற்றிருந்தார். அண்ணாமலையும், பன்னீர்செல்வமும் சந்தித்து பேசினர். அதே போன்று கோவையில் உள்ள அண்ணாமலையின் இல்லத்திற்கு வந்த டிடிவி தினகரன் அண்ணாமலையுடன் சுமார் 1 மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டார். இது நட்பு ரீதியிலான சந்திப்பு மட்டுமே இதில் அரசியல் பேசப்படவில்லை என அண்ணாமலை விளக்கமும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் தமிழக வெற்றி கழகத்திற்கு செல்லும் பட்சத்தில் அது தவெகவுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துவிடும். அதே போன்று பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு பலவீனமாக அமைந்துவிடும். எனவே பன்னீர்செல்வம், தினகரன் இருவரும் விஜய் கூட்டணிக்கு செல்லாமல் இருப்பதற்கான பணிகளை அண்ணாமலை மேற்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது.