Annamalai resignation தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே உள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ள நிலையில், அதிமுக கூட்டணியானது இன்னமும் உறுதியாகாமல் உள்ளது.
எனவே திமுகவை வீழ்த்த பலம் வாய்ந்த கூட்டணி அமைக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்கான பணிகளையும் தீவிரப்படுத்தியிருந்தார். கடந்த வாரம் டெல்லி சென்றவர் பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
Admk Bjp alliance
அதிமுக- பாஜக கூட்டணி
இதனை தொடர்ந்து அதிமுக- பாஜக கூட்டணி அமைவது உறுதி செய்யப்பட்டது. ஆனால் இந்த கூட்டணிக்கு தற்போது தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அந்த வகையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என கூறியிருந்தார். இந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில் பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலக்கப்படுவதாக தகவல் வெளியாகியிருந்தது.
BJP state leader
கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அண்ணாமலை
இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, பாஜக புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என அறிவித்துள்ளார். புதிய தலைவருக்கான போட்டியில் நான் யாரையும் கைகாட்டவில்லையெனவும், பாரதிய ஜனதா கட்சியில் தலைவர் பதவிக்கு யாரும் போட்டிப்போடுவதில்லை என கூறியுள்ளார். மேலும் எல்லோரும் இணைந்து தலைவரை தேர்ந்தெடுப்போம் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க 2026 தேர்தலை எப்படி எதிர் கொள்வது என்பது உட்பட ஏற்கனவே விரிவாக பேசி இருக்கின்றோம்.இதற்கு மேல் கருத்து சொல்ல விரும்ப வில்லை. புதிய மாநில தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெறும். என்னுடைய பணி தொண்டனாக தொடரும்.கட்சி சொல்லும் பணியை செய்வேன்.என அண்ணாமலை கூறியுள்ளார்.
Annamalai
ஒரு விவசாயின் மகனாக இருப்பேன்.
தலைவர் பதவி இல்லையென்றால் அடுத்ததாக என்ன திட்டம் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தலைவர் பதவி இல்லையென்றால் மரியாதை கொடுக்க மாட்டீர்களா.? அதற்குள் மறந்துவிடுவீர்களா.? ஒரு விவசாயின் மகனாக இருப்பேன். மறந்துவிடுவீர்களா.? ஒரு தொண்டனாக எனது பணி தொடரும். ஊழலுக்கு எதிராக வந்தவன் நான். அதில் எப்போதும் சமரசம் செய்து கொள்ளமாட்டேன். ஒரு நாள் இல்லையென்றால் ஒரு நாள் நல்ல ஆட்சியை கொண்டு வருவதற்கான முயற்சி தொடரும்.
BJP Leader annamalai
டெல்லி போனால் ஒரு இரவில் திரும்பும் ஆள் நான்
இந்த நேரத்தில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை பார்க்க வேண்டும் மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டுமா.? இதையெல்லாம் பார்க்க வேண்டியுள்ளது. எனவே தொண்டனாக கட்சி சொல்லும் பணியை செய்துவிட்டு செல்வேன். மத்திய அமைச்சராக செல்ல வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, இந்த மண்ணை விட்டு செல்ல மாட்டேன். என்னை ஏன் பேக் செய்து அனுப்ப பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். டெல்லி போனால் ஒரு இரவில் திரும்பும் ஆள் நான். இங்கு தான் சுத்திக்கொண்டு இருப்பேன் என அண்ணாமலை தெரிவித்தார்.