லண்டனில் இருந்து அலறி துடித்து மன்னிப்பு கேட்ட அண்ணாமலை.! எதற்காக தெரியுமா.?

First Published Sep 13, 2024, 1:19 PM IST

கோவையில் ஜிஎஸ்டி குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் புகார் தெரிவித்த உணவக உரிமையாளர் சீனிவாசன், பின்னர் அவரை சந்தித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரலானது. இந்த சம்பவம் அரசியல் கட்சிகளின் கண்டனத்திற்கு உள்ளான நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்டுள்ளார்.

கோவையில் தொழில்துறையினருடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  நேற்று முன்தினம் ஜி.எஸ்.டி வரி விதிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அப்போது ஜிஎஸ்டியில் உள்ள குறைபாடுகள் மற்றும் சிக்கல்கள் தொடர்பாக தங்களது பிரச்சனைகளை தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் பலரும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி வந்த நிலையில்  கோவையில் மிகவும் பிரபலமான ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் ஜி.எஸ்.டியில் ஏற்படும் பிரச்சனைகளை அமைச்சரிடம் பட்டியலிட்டார். எங்க கடையின் ரெகுலர் கஸ்டமர் தினமும் அவர்கள் சண்டை போடுகிறார்.  

சுவீட்டுக்கு  5 சதவிகிதமும், காரத்துக்கு 12 சதவிகித ஜி.எஸ்.டி விதிக்கப்படுது.  ஒரே குடும்பத்துல இத்தனை வகையான ஜி.எஸ்.டி போட்டா கடை நடத்த முடியல மேடம் என கூறியிருந்தார். மேலும் பன்னுக்கு ஒரு விலை பன்னுக்குள் உள்ளே வைக்கின்ற ஜாமுக்கு ஒரு ஜிஎஸ்டி இருப்பதாக கூறியிருந்தார். இநனால் சாப்பிட வரும் கஷ்டமர் பன்னு மட்டு கொடுங்க நாங்களே சீனியை வைத்துக் கொள்கிறோம் என தெரிவிப்பதாவும் நகைச்சுவையாக கூறியிருந்தார். மேலும் தனித்தனி ஜிஎஸ்டி விதிப்பதால் கம்யூட்டரே குழம்பிவிடுவதாக கூறியிருந்தார். 
 

Latest Videos


இந்த பேச்சு சமூகவலைதளத்தில் வைராலன நிலையில், நெட்டிசன்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமனை கிண்டலித்து வீடியோவை பரப்பி வந்தனர். இந்த சூழ்நிலையில் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமனை சந்தித்து மன்னிப்பு கேட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. நான் தவறாக பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் என எழுந்து நின்று கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறார். இந்த வீடியோவும் தற்போது டிரெண்டிங் இருக்கும் நிலையில் நிர்மலா சீதாரமன் ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்க வைத்து விட்டதாக விமர்சித்து வந்தனர். 

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் நிர்மலா சீதாராமன் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் அந்த வீடியோவை டெலிட் செய்ய வேண்டும் எனவும், நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.  இது தொடர் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும். மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கருத்து தெரிவித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், கோயம்புத்தூரில் உள்ள அன்னபூர்ணா உணவகம் போன்ற ஒரு சிறு வணிகத்தின் உரிமையாளர், மத்திய அமைச்சரிடம்  ஜிஎஸ்டி தொடர்பாக  கேட்கும்போது, ​​ஆணவத்துடன் மற்றும் முற்றிலும் அவமரியாதையுடன் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார். ஒரு கோடீஸ்வர நண்பருக்காக விதிகளை வளைக்க, சட்டங்களை மாற்ற அல்லது தேசிய சொத்துக்களைப் பெற முற்படும்போது ​​மோடி ஜி சிவப்புக் கம்பளம் வரவேற்கிறார்.

Annamalai

பணமதிப்பு நீக்கம், மக்களால் எளிதாக அனுக முடியாத வங்கி முறை, வரி பறிப்பு மற்றும் பேரழிவு தரும் ஜிஎஸ்டி போன்றவற்றின் தாக்கங்களை நமது சிறு வணிக உரிமையாளர்கள் ஏற்கனவே சகித்துக்கொண்டிருக்கிறார்கள். கடைசியாக அவர்களை மேலும் அவமானம் படுத்தப்படுகின்றனர்.  ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களின் பலவீனமான ஈகோக்கள் புண்படுத்தப்படும்போது, ​​​​அவர்கள் என்ன செய்வார்கள் என்பது அவமானமாகத் தெரிகிறது.இந்தநிலையில் லண்டன் சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசனுக்கும், மத்திய அமைச்சருக்கும் இடைய நடைபெற்ற தனிப்பட்ட வீடியோவை பாஜக நிர்வாகி வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக சீனிவாசனை தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது எனது வருத்தத்தை தெரிவித்ததாக கூறியுள்ளார்.

எனவே தமிழகத்தின் வணிகத்தில் தூணாகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பையும் சீனிவாசன் அளித்து வருகிறார். எனவே இந்த பிரச்சனையை உரிய மரியாதையோடு முடித்து வைக்குமாறு கேட்டுக்கொள்வதாக அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

click me!