அண்ணா பல்கலைக்கழக குற்றவாளி ஞானசேகரன் செய்த சம்பவம்! நள்ளிரவில் பதறிய போலீஸ்! நடந்தது என்ன?

First Published | Jan 23, 2025, 5:49 PM IST

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு விசாரணையின் போது வலிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. 

Anna University Case

கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

Gnanasekaran

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக நிர்வாகி என்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சி வெளியிட்டு வந்தனர். மேலும் போனில் சார் என குற்றவாளி ஞானசேகரன் குறிப்பிட்டதாகவும், இதனால் யார் அந்த சார் என்ற சர்ச்சை தமிழக சட்டப்பேரவை வரை வெடித்தது. இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 3 பெண் காவல் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை நியமித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 


Puzhal Central Jail

கடந்த 20-ம் தேதி ஞானசேகரனை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்து நேற்று இரவு எழும்பூர் காவல் நிலையத்தில் ஞானசேகரன் ஓய்வெடுத்தார். இரவில் உறங்கிக் கொண்டிருந்த போது ஞானசேகரனுக்கு வலிப்பு போல் கை, கால்கள் இழுத்துள்ளது. இதை கண்ட பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். வலிப்புதான் வந்துவிட்டது என நினைத்து கையில் இரும்பு பொருளை கொடுத்தனர். பின்னர் முகத்தில் தண்ணீர் தெளித்துள்ளனர். மேலும் பல்லை இறுக்கி கடித்துக்கொண்டு ஞானசேகரன் இருந்துள்ளான்.

stanley hospital

இதனையடுத்து அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த போது ஞானசேகரனுக்கு வலிப்பு எற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஞானசேகரன் வலிப்பு வந்தது போல் நாடகமாடியது அம்பலமானது. 

Latest Videos

click me!