சந்தோஷத்தில் துள்ளி குதிப்பது மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் தான்! பிப்ரவரி 2ம் தேதி முதல்!

First Published | Jan 23, 2025, 3:55 PM IST

தமிழகத்தில் 100 ஆண்டுகளைக் கடந்த 2,238 அரசு பள்ளிகளில் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும். திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் துவங்கிய விழா, அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி 23 முதல் பிப்ரவரி 2 வரை நடத்தப்படும்.

School Student

திமுக ஆட்சிக்கு பொறுப்பேற்ற பிறகு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்கள் உயர் கல்வியை தொடர அரசு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொருவருக்கும் பாடங்களை கற்றுக்கொடுக்கும் பள்ளிகளை மறக்க முடியாது.  அந்த வகையில் தாங்கள் படித்த பள்ளிகளை பார்ப்பது, படித்த வகுப்பறையை பார்ப்பதும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இந்நிலையில் அரசு பள்ளிகளை பெருமைப்படுத்தும் வகையில் தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

school education department

இது தொடர்பாக தமிழ்​நாடு மாதிரிப் பள்ளி​களின் உறுப்​பினர் செயலர் இரா.சுதன், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அதிகாரி​களுக்​கும் அனுப்பிய சுற்​றறிக்கையில்: தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்பட 2,238 அரசு பள்ளிகள் 100 ஆண்டுகளை கடந்துள்ளன. இந்த பள்ளி​களில் பெற்​றோர் மற்றும் முன்​னாள் மாணவர்கள் வாயிலாக நூற்​றாண்டு திருவிழா கொண்டாடப்பட உள்ளது.


Centenary Celebrations

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நூற்றாண்டு சுடர் ஏற்றி தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் பரிந்துரைக்கப்பட்ட பள்ளிகளில் மாவட்ட அளவிலான தொடக்க விழா ஜனவரி 23ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 

Tamilnadu Government Schools

இது மாவட்ட அளவிலான தொடக்க விழாவினைத் தொடர்ந்து பள்ளி அளவிலான நூற்றாண்டுத் திருவிழா பள்ளியின் ஆண்டு விழாவோடு முன்னாள் மாணவர்கள், பெற்றோரை இணைத்து கொண்டாடவும் கல்வித்துறை பரிந்துரைத்து இருக்கிறது. இதற்காக சில வழிகாட்டு நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை வகுத்துள்ளது. அதன்படி விழாக் குழு வாயிலாக பள்ளி ஆசிரியர்கள், முன்​னாள் ஆசிரியர்​கள், மாணவர்கள், பெற்​றோர்​கள், உள்ளாட்சி உறுப்​பினர்​கள், கல்வி அலுவலர்​கள், முன்​னாள் மாணவர்கள் மற்றும் பள்ளியைச் சார்ந்த அனைவருக்​கும் நூற்​றாண்டு விழா குறித்து தெரியப்​படுத்த வேண்டும். பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களை விழாக் குழு வாயிலாக ஒருங்கிணைத்தல் வேண்டும். 

school News

விழாவில் தற்போது பணிபுரி​யும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், முன்​னாள் ஆசிரியர்களை கவுரவிக்க வேண்​டும். மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்​படுத்த திட்​டமிட வேண்​டும். விழாவை புகைப்​படம், வீடியோ வாயிலாக பதிவு செய்து ஆவணப்​படுத்த வேண்​டும் மேற்குறிப்பிட்ட அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தவறாது பின்பற்றி இவ்விழாவினை சிறப்பாக கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!