RAMESWARAM TEMPLE
தை அமாவாசை-முன்னோர்களுக்கு தர்பணம்
அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்பணம் செய்யும் நிகழ்வானது நடைபெறும் அந்த வகையில் தை அமாவாசையையொட்டி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அந்த வகையில் இந்தாண்டு தை அமாவாசை ஜனவரி 29ல் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
இந்தநிலையில் ஜனவரி 29 அன்று ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் நடை அதிகாலை 4.00 மணிக்கு நடை திறந்து, காலை 5.00 மணிமுதல் 5.30 மணிவரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thai Amavasai
திர்த்தவாரி அறிவிப்பு
இதனையடுத்து காலை 11.50 மணிக்கு மேல் அக்னி தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தவாரி நடைபெறும் எனவும், இதனையடுத்து மாலை 5.30 மணிக்கு தீபாராதனை நடைபெற்று, இரவு 7.00 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள், பஞ்சமூர்த்திகள் மற்றும் ஸ்ரீராமர் வெள்ளிரதம் புறப்பாடு வீதி உலா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல லட்சம் பக்தர்கள் ராமேஸ்வரம் வரவுள்ள நிலையில் சிறப்பு பேருந்து தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
RAMESWARAM TEMPLE SPECIAL BUS
சிறப்பு பேருந்து இயக்கம்
தமிழகத்திலும் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரிலிருந்தும் பொதுமக்கள் தை அன்று புண்ணியஸ்தலமான இராமேஸ்வரத்திற்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதற்கு ஏதுவாக இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி வருகின்ற 29/01/2025 அன்று தை அமாவாசை வருவதால் இராமேஸ்வரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Thai Amavasai
முன்பதிவு செய்து பயணியுங்கள்
இதனடிப்படையில் வருகின்ற 28/01/2025 செவ்வாய்கிழமை அன்று சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்தும் இராமேஸ்வரத்திற்கும் மற்றும் 29/01/2025 இராமேஸ்வரத்திலிருந்து சென்னை கிளாம்பாக்கம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேற்கூறிய இடங்களிருந்து www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.