ராமதாஸ் தரப்பை ஒட்டுமொத்தமாக அழிக்க கங்கணம் கட்டிய அன்புமணி.. கொடியை கூட தொடக் கூடாதாம்..!

Published : Dec 26, 2025, 06:58 AM IST

வருகின்ற 29ம் தேதி சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பாமகவின் பொதுக்குழு, செயற்குழுவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என அன்புமணி தரப்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு.

PREV
14
பாமக பொதுக்குழுவுக்கு அன்புமணி எதிர்ப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வருகின்ற 29ம் தேதி சேலத்தில் நடைபெறும் என அக்கட்சியின் நிறுவனர் ராமாஸ் அறிவித்து இருந்தார். ஆனால் பாமக பெயரில் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என அன்புமணி தரப்பில் மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

24
காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு

சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த அன்புமணி தரப்பைச் சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் மு.கார்த்தி தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “உயர்நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தால் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி அங்கீகரிக்கப்பட்டுள்ளார். ராமதாஸ் கட்சியின் நிறுவனராக இருந்தாலும் அவருக்கு பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்ட அதிகாரம் கிடையாது.

34
ராமதாஸ்க்கு அதிகாரம் இல்லை..

கட்சியின் தலைவருக்கே அந்த அதிகாரம் உள்ளது. ஆகவே ராமதாஸ்க்கு இந்த கூட்டத்தை நடத்த அதிகாரம் இல்லை. பாமகவின் பெயரை தவறாக பயன்படுத்தி அனுமதி கேட்டால் அது சட்டவிரோதமானது. பாமகவின் பெயரையோ, கொடியையோ, அடையாளங்களையோ தவறாக பயன்படுத்தும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

44
29ல் கூட்டணி அறிவிப்பு..

இதனிடையே பாமகவின் பொதுக்குழு, செயற்குழு திட்டமிட்டபடி ராமதாஸ் தலைமையில் வருகின்ற 29ம் தேதி சேலத்தில் நடைபெறும் என கௌரவ தலைவர் ஜிகே மணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த கூட்டத்தின் போது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி என்று அறிவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories