நடிகர் விஜய்க்கு பேச்சு மட்டும் போதாது.. நடிகர் விஜய்க்கு அட்வைஸ் செய்த அன்புமணி ராமதாஸ் !

First Published | Jul 8, 2023, 6:29 PM IST

நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருந்த நிலையில், நடிகர் விஜய்க்கு அறிவுரை கூறியுள்ளார்.

லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுதொடர்பாக வெளியிட்டபதிவில், “நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது.

நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும். லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு. சட்டமும் அதைத் தான் சொல்கிறது.

Tap to resize

எனவே, நடிகர் விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு அன்புமணி அறிவுரை வழங்கியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ், “2026-ல் பாமக தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் 2024 மக்களவைத் தேர்தலை நாங்கள் அணுக உள்ளோம்.

முதல்வரும் ஆளுநரும் அரசியலமைப்புக்கு உட்பட்டவர்கள். முதலமைச்சர் என்ன சொல்கிறாரோ அதற்கு ஏற்ப ஆளுநர் கேட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஆளுநர் இதில் அரசியல் செய்யக்கூடாது. மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசும் கர்நாடக அரசும் அமர்ந்து பேசி உரிய தீர்வை காண வேண்டும். இந்த பிரச்சினை இப்படியே தொடர்வதற்கு இரண்டு மாநில அரசுகளும் அனுமதிக்கக்கூடாது.

இது தொடர்பாக தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். நடிகர் விஜய் தலைவர்களைப் பற்றி பேசினால் போதாது. அவர்களுடைய கொள்கைப்படி நடந்து கொள்ள வேண்டும். தந்தை பெரியாரைப் பற்றியோ, அம்பேத்கரை பற்றியோ, கர்மவீரர் காமராசரை பற்றியோ பேசினால் மட்டும் போதாது அவர்களுடைய கொள்கைகளை ஏற்று அதற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

WhatsApp-ன் 5 சீக்ரெட் அம்சங்கள் உங்களுக்கு தெரியுமா.? தெரிஞ்சா அசந்துடுவீங்க

Latest Videos

click me!