இந்நிலையில் டிஐஜி விஜய்குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், இரவில் சரியான தூக்கம் வரவில்லை என்பதால் நீண்ட நாட்களாக தூக்க மாத்திரை எடுத்துக்கொண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஐஜியின் பாதுகாவலர் ரவிச்சந்திரனின் வாக்குமூலமும் அந்த முதல் தகவல் அறிக்கையில் வெளியாகியுள்ளது. அதில், கோவை சரகத்திற்கு ஜனவரி மாதம் வந்ததிலிருந்து சரியான தூக்கம் வரவில்லை என்று மாத்திரை எடுத்துக்கொள்வார். நான் முகாம் அலுவலகத்தில் எனக்கு ஒதுக்கப்பட்ட அறையிலேயே தங்கியிருந்தேன். வழக்கம்போல் எப்போதும் டிஐஜி காலை 07.00 மணிக்கு DSR பார்ப்பதற்காக கீழே உள்ள DSR ROOMக்கு வருவார். நேற்று 06.30 மணிக்கெல்லாம் டிஐஜி கீழே வந்துவிட்டார்.