வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து அமமுக போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று சென்னையில் தனது கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்களை நேரில் சந்தித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. எங்களுக்குள் நடப்பது வெறும் பங்காளி சண்டை மட்டும் தான்.
22
திடீரென யூடர்ன் அடித்த தினகரன்
தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த மாதம் எங்களுக்கு துரோகம் விளைவித்த பழனிசாமியை எப்படி எங்களால் ஏற்றுக்கொள்ள முடியும்..? பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க இயலாது. அவரை மாற்றினால் மீண்டும் கூட்டணிக்குள் வருவது பற்றி பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.