ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு பிளவுபட்ட அதிமுகவில் மீண்டும் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் இணைந்து வருகின்றனர். அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். இதன் மூலம் அதிமுக வலுப்பெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அமமுகவை காலி செய்ய திட்டம் போட்ட எடப்பாடி.! முக்கிய நிர்வாகிகளை தட்டித் தூக்கிய அதிமுக
அதிமுக பொதுச்செயலாளராகவும், தமிழக முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டியால் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, சசிகலா, டிடிவி தினகரன் என தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தேர்தலில் வாக்குகள் சிதறி வெற்றியை இழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தேர்தலில் அதிமுகவிற்கு பெரிய அளவில் வெற்றி வாய்ப்பு கிட்டவில்லை.
24
மீண்டும் ஒன்றிணையுமா அதிமுக.?
எனவே பிரிந்து சென்ற நிர்வாகிகள் ஒன்றிணைய வேண்டும் என தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு அதிமுகவில் மீண்டும் இடமில்லையென எடப்பாடி பழனிசாமி உறுதியாக தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் தான் அதிமுகவை வலுப்படுத்தும் வகையில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற இரண்டாம் கட்ட நிர்வாகிகளை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்து வருகிறது. அந்த வகையில் அமமுகவில் பல்வேறு மாவட்டங்களில் முக்கிய நிர்வாகிகளை ஒன்றன் பின் ஒன்றாக அதிமுக இணைத்து வருகிறது.
34
சேர்த்துக்கொள்ள மறுக்கும் எடப்பாடி
அதன் படி நேற்று அமமுக மாவட்ட நிர்வாகிகள், சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமானஎடப்பாடி K. பழனிசாமியை சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மின்சாரப் பிரிவு தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் திரு. பழவை P. பன்னீர்செல்வம், வட சென்னை கிழக்கு மாவட்ட மன்ற துணைச் செயலாளர் திரு. D. முரளி, 10-வது வட்டச் செயலாளர் திரு. C.M. முனிபாபு ஆகியோர் இணைந்தனர்.
44
அதிமுகவில் அமமுக நிர்வாகிகள்
இதே போல வடசென்னை 2-வது வட்டச் செயலாளர் திரு. காதர் அலி, இணைச் செயலாளர் திருமதி சாந்தி பெரியசாமி, மேலமைப்புப் பிரதிநிதி திரு. I. காதர் பாஷா, துணைச் செயலாளர் திரு. D. ரகு, 1-வது வட்ட துணைச் செயலாளர் திரு. P. பாபு, திரு. L. பொற்கேஷ்வரன், திரு. N. தயாளன், திரு. D. குமார், திரு. R. தேசப்பன், திரு. R. சரவணன், திரு. M. தேசப்பன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.