அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம் .? நள்ளிரவில் தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published : Feb 05, 2025, 06:30 AM ISTUpdated : Feb 05, 2025, 10:00 AM IST

 பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய மூன்று திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

PREV
15
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம் .? நள்ளிரவில் தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பென்சன்.! நள்ளிரவில் தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அரசு ஊழியர்கள் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் பாலமாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதில் முக்கியமானது ஓய்வூதியம், பழைய  திட்டத்தின் கீழ், பணியின் போது ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஓய்வூதியம் பிடித்தம் செய்யப்படாது. முழு ஓய்வூதியத் தொகையையும் அரசு வழங்கும். ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக பழைய ஓய்வூதிய திட்டம் நிறுத்தப்பட்டது. இதற்கு அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

25
பழைய ஓய்வூதிய திட்டம்

அந்த வகையில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்து கின்றனர். இந்த நிலையில் திமுக அரசும் ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அதன் படி தற்போது ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 01.04.2003 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே வேளையில் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System) 01.01.2004 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

35
அரசு ஊழியர்கள் போராட்டம்

இருப்பினும் மாநில அரசுப் பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது.எனினும் மாநில அரசுப்பணியாளர்கள் 01.04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்திட வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில், 24.01.2025 அன்று ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

45
எந்த ஓய்வூதிய திட்டம் சிறந்தது

எனவே, பழைய ஓய்வூதியத் திட்டம். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட கீழ்க்காணும் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

55
குழு அமைத்த தமிழக அரசு

1. திரு. ககன்தீப்சிங் பேடி, இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை.

2. டாக்டர்.கே.ஆர்.சண்முகம், முன்னாள் இயக்குநர், Madras School of Economics

3. திரு.பிரத்திக் தாயள், இ.ஆ.ப., துணைச் செயலாளர் (வரவு செலவு), நிதித் துறை, உறுப்பினர் செயலர்.

இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையினை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories