மதுரையில் அமித்ஷா.! திமுகவை வீழ்த்த ஸ்கெட்ச்- கூட்டணியில் இணையப்போகும் புதிய கட்சி என்ன.?

Published : Jun 08, 2025, 07:50 AM IST

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, பாஜக மூத்த தலைவர் அமித்ஷா மதுரையில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.  தேர்தல் வியூகம் குறித்த ரகசிய ஆலோசனைகளுக்கு இந்த கூட்டம் வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

PREV
14
தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 காலத்திற்கும் குறைவான நாட்களே இருப்பதால் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ள திமுகவை வீழ்த்த அதிமுகவும் அதற்கு இணையாக டப் கொடுக்கும் வகையில் கூட்டணியை ஏற்படுத்தியு வருகிறது. 

இனி பாஜகவுடன் கூட்டணி இல்லையென அறிவித்த எடப்பாடி, எதிர்ப்பு வாக்குகளை ஒன்றிணைக்கும் வகையில் பாஜகவோடு இணைந்துள்ளார். அடுத்ததாக புதிய கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

24
பாஜக கூட்டணியில் இணையும் கட்சிகள்

அந்த வகையில் பாமக மற்றும் தேமுதிகவை தங்கள் கூட்டணியில் இணைக்க காய் நகர்த்தப்படுகிறது. கடந்த முறை பாஜக மூத்த தலைவர் அமித்ஷா தமிழகம் வந்த போதே பாமகவும் பாஜக கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி ஷாக் கொடுத்திருந்தார். எனவே அந்த திட்டம் தடைபட்டது. இந்த முறை பாமகவை பாஜக-அதிமுக கூட்டணியில் இணைக்க ஆடிட்டர் குருமூர்த்தி மூலம் ராமதாஸிடம் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்காக திரைமறைவில் ரகசிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

34
மதுரையில் அமித்ஷா

இதனிடையே நேற்று இரவு மதுரை வந்தடைந்த மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன், வானதி சீனிவாசன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்ட 27 முக்கிய பிரமுகர்கள் சந்தித்து வரவேற்பு அளித்தனர். 

மதுரையில் இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்கிறார். இதனை தொடர்ந்து புறக்கடை பகுதியில் நடைபெறும் பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விட்டு இன்று மாலை 7 மணி அளவில் மீண்டும் மதுரையிலிருந்து ராணுவ விமானம் மூலம் டெல்லி செல்கிறார் அமித்ஷா.

44
தேர்தல் வியூகம் சொல்லும் அமித்ஷா

இந்த நிலையில் இன்று மதுரையில் நடைபெறும் பாஜக கூட்டத்தில் தேர்தல் வியூகம், கூட்டணி வியூகம், திமுக மீதான அதிருப்தி வாக்குகளை பறிப்பது என பல வித ஆலோசனைகளை அமித்ஷா வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இன்று அமித்ஷாவை பாமக மற்றும் ஒரு சில கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அமித்ஷாவின் இன்றைய மதுரை பயணம் அரசியல் பார்வையாளர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories