ரோட் ஷோ.. அரசியல் கட்சிகளுக்கு கடிவாலம் போட்ட தமிழக அரசு.. ரூ.20 லட்சம் வைப்பு தொகை கட்டாயம்

Published : Nov 06, 2025, 02:36 PM IST

அரசியல் கட்சிகள் ரோட் ஷோ நடத்துவது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் அரசியல் கட்சிகள் ரூ.20 லட்சம் வரை வைப்பு தொகையை செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

PREV
14
அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவுகள்

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதித வெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இனைத் தொடர்ந்து, அரசியல் கட்சித் தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்வுகள், பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பரிந்துரைக்குமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், பொதுக்கூட்டம், ரோடு ஷோக்கள் நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சில நாட்களுக்கு முன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இன்று மூத்த அமைச்சர்கள் முன்னிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் கலந்து கொண்டன. அனைத்து கட்சிகளின் ஆலோசனைக்கு பின்னர் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

24
வைப்புத்தொகை

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூட்டத்தின் அடிப்படையில் முன்னதாகவே வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேரை வரை கூடும் கூட்டங்களுக்கு ரூ.1 லட்சமும், 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை கூடும் கூட்டங்களுக்கு ரூ.3 லட்சமும், 20 ஆயிரம் பேர் முதல் 50 ஆயிரம் பேர் வரைக் கூடினால் ரூ.8 லட்சமும், 50 ஆயிரம் பேருக்கு மேல் கூடினால் ரூ.20 லட்சம் வைப்புத் தொகை செலுத்த வேண்டும்.

34
நேரக்கட்டுப்பாடு

ரோட் ஷோ, பொதுக்கூட்டம் உள்ளிட்டவை நடத்த 3 மணி நேரத்திற்கு மேல் அனுமதி கிடையாது. மேலும் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 2 மணி நேரத்திற்கு அதிகமாக மக்கள் காக்க வைக்கப்படக் கூடாது. நிகழ்ச்சியை நடத்த 3 மணி நேரதிற்கு மேல் அனுமதி தேவைப்படும் பட்சத்தில் அது தொடர்பாக காவல்துறை அதிகாரி முடிவெடுப்பார்.

44
அமைதியாக கலைந்து செல்வது முக்கியம்

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அமைதியாக கலைந்து செல்வதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் உறுதி செய்ய வேண்டும். நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 15 தினங்களுக்கு முன்னதாக அனுமதி பெற வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் உயர்நீதிமன்றத்திற்கு பரிந்துறையாக வழங்கப்படும். அதன் அடிப்படையில் நீதிமன்றம் இறுதிக்கட்ட முடிவை அறிவிக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories