சிகரெட் சூடு! இதயம், கல்லீரல், மூளையில் ரத்தக் கசிவு! அஜித்குமாரின் பிரேத பரிசோதனையில் பகீர்!

Published : Jul 04, 2025, 09:32 AM IST

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த மடப்புரத்தில் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் அஜித்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் 50க்கும் மேற்பட்ட காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

PREV
14
அஜித்குமார் உயிரிழப்பு

சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு அஜித்குமார் வழக்கில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்துள்ள மடப்புரம் பத்தரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தவர் அஜித்குமார். நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் அஜித்குமாரை அழைத்து சென்று போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

24
வீடியோ வைரல்

இந்த சம்பவத்தில் போலீசார் இரும்பு கம்பியால் தாக்கும் வீடியோ மற்றும் அஜித்குமார் கதறும் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை எற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து 5 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் மாவட்ட எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கும். டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

34
அஜித்குமாரின் பிரேத பரிசோதனை

இந்நிலையில் அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், அஜித்குமாரின் இடது கையில் 3 இடங்களில் சிகரெட் சூடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மூளையில் இரு இடங்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. மண்டை ஓட்டின் இரு பக்கங்கள் நடுமண்டை, தலைப்பகுதி முழுவதுமாக கட்டையால் அடித்த காயம் உள்ளது. நாக்கைக் கடித்ததை போன்ற நிலை உள்ளது. தலையில் அடிபட்டதால் வலிப்பு ஏற்பட்டுள்ளது. கண்கள் சிவந்து வீங்கியுள்ளன.

44
மொத்தமாக 50க்கும் மேற்பட்ட காயங்கள்

காதுகளில் ரத்தக்கசிவும், உடலில் 6 பெரிய காயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மொத்தமாக 50க்கும் மேற்பட்ட காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக இதயத்தில் இரு இடங்களில் ரத்தக்கசிவும், அதேபோல் கல்லீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. உடலில் ஏற்பட்ட காயங்களில் மிளகாய்ப் பொடி தூவியதற்கான சாத்தியகூறுகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. பல மணி நேரம் கும்பலாக சேர்ந்து இந்த சித்ரவதையை நடத்தி இருக்கலாம் என்று அறிக்கையில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories