Erode East constituency
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. இந்த இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதில், ஆளும் கட்சியாக திமுகவும், நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றனர்.
Senthil Murugan
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்த நிலையில் அதிமுக மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை செயலாளர் செந்தில்முருகன் சுயேட்சையாக களமிறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் கடந்த 2023ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் சின்னம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால் அவர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். பின்னர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
Edappadi Palanisamy
இந்நிலையில் தலைமை உத்தரவை மீறி செயல்பட்ட செந்தில்முருகன் அக்கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார். வேட்பாளர் இறுதி பட்டியல் நேற்று வெளியான நிலையில் செந்தில்முருகன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.
Muthusamy
இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக ஈரோடு திமுக மாவட்ட செயலாளரும் வீட்டு வசதித்துறை அமைச்சருமான முத்துசாமி, ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலையில் செந்தில்முருகன் திமுகவில் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.