இலவசமாக அறுபடை வீடு ஆன்மீக சுற்றுலா.! பக்தர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

First Published | Jan 21, 2025, 11:22 AM IST

தமிழக அரசின் அறநிலையத்துறை, மூத்த குடிமக்களுக்கு அறுபடை வீடு இலவச ஆன்மிகப் பயணத்தை செயல்படுத்துகிறது. திருச்செந்தூரில் இருந்து தொடங்கிய மூன்றாம் கட்டப் பயணத்தில் 207 மூத்த குடிமக்கள் பயணம் செய்கின்றனர். இதுவரை 410 மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தின் கீழ் பயணம் செய்துள்ளனர்.

tamilnadu temple

தமிழக அரசின் ஆன்மிக திட்டங்கள்

இந்தியாவிலேயே அதிக கோயில்களை மாநிலமாக தமிழகம் உள்ளது. அந்த வகையில் பல ஆயிரம் கோயில்கள் தமிழகத்தில் உள்ளது. அதிலும் பிரசித்தி பெற்ற ஆயிரக்கணக்கான கோயில்களும் உள்ளது. இதன் காரணமாகவே தமிழகத்தை ஆன்மிக பூமியாக கூறிவருகின்றனர். அந்த வகையில் ஆன்மிக பக்தர்களுக்கு பயனளிக்கும் வகையில் தமிழக அரசு சார்பாக திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. அதிலும் அறநிலையத்துறை சார்பாக கோயில்களில் குடமுழக்கு நடத்துவது முதல் அன்னதானம் திட்டம் செயல்படுத்துவது வரை பார்த்து பார்த்து செயல்படுத்துகிறது.

temple

கோயில்களுக்கு ஆன்மிக பயணம்

அந்த வகையில் ஆன்மிக மக்கள் அதிகமாக விருப்பப்படும் இராமேஸ்வரம் காசி ஆன்மிகப் பயண திட்டத்தையும் தமிழக அறநிலையத்துறை செயல்படுத்து வருகிறது. 2023 -24 ஆம் நிதியாண்டில் ரூ.75 லட்சம் அரசு மானியத்தில் 300 மூத்த குடிமக்களும் காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இந்தாண்டு 51.05 கோடி அரசு மானியத்தில் 420 மூத்த குடிமக்கள் வருகின்ற 2025 பிப்ரவரி மாதம் அழைத்துச் செல்லப்படுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.  இது மட்டுமில்லாமல்  சீனாவில் உள்ள மானசரோவர் புனித பயணம் செல்லும் 500 நபர்களுக்கு அரசு மானியமாக  ரூ.50ஆயிரமாக வழங்கி வருகிறது.


arupadai veedu free tour

மானியம் வழங்கும் தமிழக அரசு

மேலும்  நேபாளத்திலுள்ள முக்திநாத் திருக்கோயிலுக்கு புனித பயணம் செல்லும் பக்தர்கள் 500 பேருக்கு  அரசு மானியமாக 20 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் அறுபடை வீடு சுற்றுலா பயண திட்டத்தையும் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்காக அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்காக 2025 ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 1.008 மூத்த குடிமக்கள் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தை நிறைவு செய்யும்  வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

arupadai veedu tour

அறுபடை வீடு ஆன்மிக சுற்றுலா

இத்திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.1.58 கோடி நிதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் மூன்றாம் கட்டப் பயணம்  திருச்செந்தூரில் இருந்து இன்று தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மூத்த குடிமக்களுக்காக செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் மூன்றாம் கட்டப் பயணம் திருச்செந்தூர். அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிலிருந்து இன்று (21.01.2025) தொடங்கியுள்ளது. அந்தவகையில்,

tiruchendur murugan temple

கட்டணமில்லா ஆன்மிக பயணம்

2024-2025 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பின்படி முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம். திருச்செந்தூர். பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு முதற்கட்டமாக சென்னை, கந்தகோட்டத்திலிருந்தும், இரண்டாம் கட்டமாக பழனியிலிருந்தும் இதுவரை 410 மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணமாக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். 

arupadai veedu

தொடங்கியது ஆன்மிக சுற்றுலா

அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி.மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை. ஆகிய மண்டலங்களைச் சேர்ந்த 207 மூத்த குடிமக்கள் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் மூன்றாம் கட்டப் பயணம் இன்று (21.01.2025) திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டுள்ளது.  இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளுடன் போர்வை, துண்டு. குளியல் சோப். டூத் பிரஷ் மற்றும் பேஸ்ட் போன்ற பொருட்கள் அடங்கிய பயணவழிப் பைகள் வழங்கப்படுகின்றன.  

இம்மூன்றாம் கட்டப் பயணம் திருச்செந்தூரில் தொடங்கி திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, சுவாமிமலை, திருத்தணி, பழனி ஆகிய படைவீடுகளுக்கு சென்று ஜனவரி மாதம் 24 ஆம் தேதியன்று நிறைவடைகிறது என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. 

Latest Videos

click me!