ரூபாய் 3 லட்சம் மானியத்தோடு சொந்த தொழில் தொடங்க சூப்பர் சான்ஸ்- உடனே விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

Published : Jan 28, 2025, 07:02 AM IST

தமிழக அரசு, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், தனியார் துறையுடன் இணைந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சொந்தத் தொழில் தொடங்க விரும்புவோருக்குப் பயிற்சி மற்றும் கடனுதவி வழங்கப்படுகிறது. 

PREV
16
ரூபாய் 3 லட்சம் மானியத்தோடு சொந்த தொழில் தொடங்க சூப்பர் சான்ஸ்- உடனே விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு
ரூபாய் 3 லட்சம் மானியத்தோடு சொந்த தொழில் தொடங்க சூப்பர் சான்ஸ்

 

தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் வேலை தேடி வரும் இளைஞர்களுக்காக தனியார் துறையோடு இணைந்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் சொந்த தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்களுக்காக பயிற்சியும் வழங்கி கடனுதவிக்கான வழிகாட்டியும் வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யும் வகையில் முதல்வர் மருந்தகம் தொடங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

26
தகுதி என்ன.?

இதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் மருந்தகம் தொடங்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் கடைசி வாய்ப்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,  முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B.Pharm / D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன். தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் www.mudhalvarmarundhagam.tn.gov.in முதல்வர் என்ற மருந்தகம் இணையதளம் அமைக்க மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

36
விண்ணப்பிக்க கடைசி நாள்

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில் முனைவோர், இணையதளம் மூலம் 05.02.2025 -க்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகம் தொடர்பாக பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியின் அடிப்படையிலும், முன்னுரிமை அடிப்படையிலும் ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

46
நிபந்தனைகள் என்ன.?

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு 110 சதுர அடிக்குக் குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். 

சொந்தமாக இடம் இருந்தால் அதற்கான சான்றிதழ் சமர்பிக்க வேண்டும். சொத்துவரி ரசீது (அல்லது) குடிநீர்வரி ரசீது (அல்லது) மின் இணைப்பு ரசீது, 

வாடகை இடம் உள்ளது என்றால் அந்த இடத்திற்கான உரிமையாளரிடம் வாடகை ஒப்பந்தப் பத்திரம் (Rental Agreement Documents) பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. 

56
தமிழக அரசு வழங்கும் மானியம்

 

முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு, அரசு மானியம் ரூ.3.00இலட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும். தொழில் முனைவோருக்கு முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு நிதி தேவைப்படும் நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும். TABCEDCO, TAHDCO மற்றும் TAMCO பயனாளிகளும் இதில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

66
மானியம் வழங்குவது எப்படி.?

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்குப் பயிற்சி அளித்து முதல் தவணை மானியத்தொகை ரூ.1.50 இலட்சம் விடுவிக்கப்படும் எனவும், முதல்வர் மருந்தகம் அமைக்க தெரிவு செய்யப்படும் தொழில் முனைவோர். முதல்வர் மருந்தகத்திற்கு உட்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள், குளிர்சாதனப்பெட்டி, ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவப்பட்ட பிறகு, இறுதிக்கட்ட மானியம் 1.50 இலட்சம் ரூபாய் மதிப்பிற்கு மருந்துகளாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!

Recommended Stories