திருச்செந்தூர்- ராமேஸ்வரம் 3 நாட்கள் ஆன்மிக சுற்றுலா-TTDC புதிய சுற்றுலா அறிவிப்பு
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவு கோயில்களை கொண்ட மாநிலமாக உள்ளது. அந்த வகையில் பல்வேறு சிறப்பு வாய்ந்த கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களை வாழ்நாளில் ஒருநாளாவது சுற்றிப்பார்க்க வேண்டும், தரிசனம் செய்ய வேண்டும் என்பது பெரும்பாலான ஆன்மிக பக்தர்களின் கனவாக உள்ளது.
அந்த வகையில் எப்படி செல்வது.? பாதுகாப்பு வசதி.? என பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழும் அந்த வகையில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பாக பல்வேறு சுற்றுலா செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஆன்மிக சுற்றுலா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் புதிய ஆன்மிக சுற்றுலாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆன்மிக சுற்றுலா
புதிய சுற்றுலா திட்டம் தொடர்பாக சுற்றுலா துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் 3 நாட்கள் திருச்செந்தூர், இராமேஸ்வரம். சுற்றுலா சென்னை வாலாஜா சாலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக சுற்றுலா வளாகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர், உத்திரகோசமங்கை மற்றும் இராமேஸ்வரம், சென்று திங்கட்கிழமை காலை சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.
மேற்கண்ட சிறப்பு ஆன்மிக சுற்றுலாவில் முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் அமைந்து இருக்கும் திரு செந்தில் ஆண்டவர் திருக்கோவிலில் சிறப்பு தரிசனம்.
உலகிலேயே முதல் கோயில்
உலகிலேயே முதலில் தோன்றிய முதல் கோவில் இராமநாதபுரத்தில் அமைந்து இருக்கும் உத்திரகோசமங்கை, மங்களநாதர் கோவிலில் சிறப்பு தரிசனம். தென்னிந்தியாவின் காசி என அழைக்கப்படும் இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள இராமநாத சுவாமி திருக்கோவிலில் சிறப்பு தரிசனம் இக்கோவிலில் 22 தீர்த்தங்கள் இதன் சிறப்பு அம்சம் ஆகும்.
மேலும் இச்சுற்றுலாவில் தனுஷ்கோடியினை சிறப்பு பார்வையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆன்மிகப் பயணத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதிகளில் ஆன்மிக சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் வசதிகள் மற்றும் 3 வேளை உணவும் வழங்கப்படும்.
சுற்றுலா பயண கட்டணம்.?
இந்த சுற்றுலாவிற்கு அனைத்து செலவுகளையும் சேர்த்து ஒருவருக்கு 12ஆயிரத்து 300 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத் திட்டங்களுக்கு முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com இணையதள பக்கத்திலும், அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம். மேலும் கூடுதல் விவரங்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தொலைபேசி எண்களை (180042531111) (Toll Free). 044-25333333 மற்றும் 044-25333444 தொடர்பு கொண்டு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.