பாஜகவுடன் கூட்டணி முடிவு.! மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு திடீர் அழைப்பு விடுத்த எடப்பாடி

Published : Apr 22, 2025, 12:33 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு 10 மாதங்களுக்கு முன்பாகவே பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதாக அமித்ஷா அறிவித்துள்ளார். இதனையடுத்து அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

PREV
14
பாஜகவுடன் கூட்டணி முடிவு.! மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு திடீர் அழைப்பு விடுத்த எடப்பாடி

ADMK District Secretaries Meeting : தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சரியாக 10 மாத காலத்திற்குள் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் பாஜகவுடன் 2026ஆம் ஆண்டு மட்டுமல்ல 2031ஆம் ஆண்டும் கூட்டணி இல்லையென எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

ஆனால் திடீரென டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து கூட்டணி தொடர்பாக ஆலோசித்தார். இதனையடுத்து தமிழகம் வந்த அமித்ஷா அதிமுக- பாஜக 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவித்தார். 

24
Admk Bjp alliance

உறுதியான அதிமுக- பாஜக கூட்டணி

இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமித்ஷா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளுக்கு விருந்து அளிக்கப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது முதல் கட்ட தலைவர்கள் வரவேற்றுள்ள நிலையில் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஒரு சில மாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் கட்சியின் செயல்பாடு. கூட்டணி தொடர்பாக ஆலோசிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

34
ADMK District Secretaries Meeting

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 25.4.2025 வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

44
EPS ADMK

தேர்தல் வியூகம் என்ன.?

இந்த கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டு கூட்டணி தொடர்பாக ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பாஜக கூட்டணியால் அதிமுகவிற்கு எந்தவகையில் லாபம், இழப்பு என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Read more Photos on
click me!

Recommended Stories