விஜய் விழாவில் பங்கேற்க திருமாவளவனுக்கு தடை போட்ட திமுக அமைச்சர் யார்? ஆதவ் அர்ஜுனா பேட்டி!

First Published | Dec 14, 2024, 10:14 AM IST

விஜய் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை. இதற்கு திமுக கொடுத்த அழுத்தமே காரணம் என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

Aadhav Arjuna

சென்னையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா  நடைபெற்றது. இந்த விழாவில் விசிக துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, தவெக தலைவர் விஜய், அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, விகடன் குழுமத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் விசிகவின் திருமாவளவனும் கலந்து கொள்ள இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் விழாவில் கலந்து கொள்ளவில்லை. திமுகவை தொடர்ந்து எதிர்த்து வரும் விஜய் இந்த விழாவில் பங்கேற்றதால், திமுகவின் அழுத்தத்துக்கு பணிந்தே திருமாவளவன் விழாவில் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் பரவின. ஆனால் திருமாவளவன் இதை தொடர்ந்து மறுத்து வந்தார். 
 

Aadhav Arjuna and Thirumavalavan

மேலும் இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா திமுகவை கடுமையாக தாக்கினார். ''தமிழ்நாட்டில்  மன்னராட்சி நடைபெறுகிறது. பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராக கூடாது. தமிழகத்தை இனி ஒரு கருத்தியல் தலைவர்தான் ஆளவேண்டும். தமிழகத்தில் மன்னராட்சிக்கு ஒருபோதும் இனி இடம் இல்லை'' என்று அவர் ஆவேசமாக பேசினார். 

ஆதவ் அர்ஜுனாவின் பேச்சால் உதயநிதி ஸ்டாலின் உள்பட திமுகவினர் கொதிப்படைந்தனர். ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து நீக்க வேண்டும் என அக்கட்சியினரே கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜுனாவை விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்= அறிவித்தார்.

பாலின் அளவை 50 மிலி குறைத்து ஆவின் அப்பட்டமான மோசடி'; அன்புமணி குற்றச்சாட்டு!

Tap to resize

Aadhav Arjuna vs DMK

திமுக கொடுத்த அழுத்தம் காரணமாகவே ஆதவ் அர்ஜுனாவை திருமாவளவன் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தார் என பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் இதற்கும் மறுப்பு தெரிவித்த திருமாவளவன், ''ஆதவ் அர்ஜுனா குறித்து முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுகவினர் யாரும் என்னிடம் பேசவில்லை. திமுக அழுத்தம் கொடுத்து இணங்கும் அளவுக்கு நானோ, விசிகவோ பலவீனமாக இல்லை'' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், திமுக கொடுத்த அழுத்தம் காரணமாகவே விஜய் பங்கேற்ற விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு பேட்டியில் பேசிய அவர், ''விஜய் பங்கேற்ற புத்தக விழாவில் பங்கேற்கக் கூடாது என திருமாவளவனுக்கு திமுக அழுத்தம் கொடுத்தது என்பதுதான் உண்மை.

Thirumavalavan and DMK


திருவண்ணாமலையில் திருமாவளவனை சந்தித்த அமைச்சர் எ.வ. வேலு, ''விஜய் விழாவிற்கு செல்ல வேண்டாம். நீங்கள் சென்றால் கூட்டணியில் பிரச்சனையாகிவிடும்'' என்று கூறினார். மேலும் விஜய் விழாவில் திருமாவளவன் பங்கேற்பதை முதல்வர் ஸ்டாலினும் விரும்பவில்லை எனவும் எ.வ. வேலு திருமாவளவனிடம் தெரிவித்தார். ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கூட்டணி உருவாகும் என்ற கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திமுகவின் செயல் ஜனநாயகத்துக்கு எதிரானது; முதிர்ச்சியற்றது'' என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

'டிசம்பர் 16'; புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; இந்த மாவட்டங்களில் கனமழை கொட்டப்போகுது!
 

Latest Videos

click me!