நெல்லையில் கடந்த ஆண்டைபோல் இந்த ஆண்டும் பலத்த மழை கொட்டி வருகிறது. நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நெல்லை நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. நெல்லை பழைய பேருந்து நிலைய பகுதிகள் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பேட்டை, டவுண் ஆகிய பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது
மேலும் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளது. இது தவிர முக்கூடல், கடையம் ஆகிய பகுதிகளையும் வெள்ளம் விட்டு வைக்கவில்லை.இதேபோல் தென்காசி மாவட்டம் முழுவதும் இடைவிடாமல் கனமழை கொட்டி வருகிறது. ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும், தென்காசி, செங்கோட்டை நகர பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது.
இடைவிடாமல் கொட்டும் கனமழையால் குற்றால மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தென்காசி சிற்றாரில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மரண பயத்தை காட்டும் வடகிழக்கு பருவமழை!