மதுரை மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பாக 37 வது ஆண்டு மதுரை ஆணழகன் போட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பூங்கா முருகன் கோவில் சஷ்டி மண்டபத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை மாவட்டத்தில் கே.கே.நகர், பைபாஸ், செல்லூர், மேலூர், கோரிப்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவர்களுக்கு பல கட்டமாக போட்டிகள் நடத்தப்பட்டது. 40 கிலோ, 50, கிலோ, 65 கிலோ, 80 கிலோ உடல் எடை பிரிவில் உள்ள ஆணழகன்கள் கட்டழகை காட்டி போட்டியில் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் தங்களது கட்டுடுலை நடுவர்களின் உத்தரவின்படி செய்து காட்டினர்.