Image: Lyca Productions Twitter
லால் சலாம் படப்பிடிப்பில் ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படிப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்ததையடுத்து, தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் முக்கிய வேடத்தில் நடத்தி வருகிறார். இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். கிரிக்கெட் விளையாட்டை சார்ந்து உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம். இந்த படத்திற்கான பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்துள்ள நிலையில் இறுதி கட்ட காட்சிகள் திருவண்ணாமலையில் நடைபெற்று வருகிறது.
rajinikanth
திருவண்ணாமலை வந்த ரஜினி
இந்த ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் திருவண்ணாமலையில் சென்று அங்குள்ள தனியார் கல்லூரியில் தங்கி படப்பிடிப்பில் நடித்து வருகிறார். நடிகர் ரஜினி காந்த் திருவண்ணாமலை கோயிலுக்கு தேவையான உதவிகளை அவ்வப்போது செய்து வருகிறார். 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதைகளிலும் நடிகர் ரஜினி கிரிவலம் சென்று தரிசனம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி திருவண்ணாமலைக்கு சென்ற ரஜினிகாந்த் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டார். கோவிலுக்கு நடிகர் ரஜினி வந்ததை அறிந்த பொதுமக்கள் ரசிகர்கள் ஏராளமானோர் கோயிலை சூழ்ந்தனர்.
ரஜினியை சந்தித்த தமிழக அமைச்சர்
அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த ரஜினிகாந்தை பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் அடையாளம் கண்டு செல்ஃபி மற்றும் புகைப்படங்களை எடுப்பதற்கு ஒரே இடத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் பாதுகாப்போடு நடிகர் ரஜினி காந்தை பத்திரமாக அழைத்து சென்றனர். அப்போது ரசிகர்களுக்கு வணக்கம் சொல்லி தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த நிலையில் திருவண்ணாமலையில் உள்ள தனது கல்லூரியில் தங்கியிருக்கும் நடிகர் ரஜினிகாந்தை திமுகவின் மூத்த அமைச்சரும். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த எ.வ வேலு மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
திருவள்ளுவர் சிலை பரிசளித்த அமைச்சர்
அப்போது திருவள்ளுவர் சிலையை ரஜினிகாந்த்திற்கு பரிசளித்த எ.வ வேலு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டதற்கு தனது மகிழ்ச்சியையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொண்டார்.திமுகவில் மூத்த அமைச்சராக இருக்கும் எவ வேலு, ஆரம்பத்தில் எம்ஜிஆர் மீது கொண்டபற்றின் காரணமாக அதிமுகவில் இருந்தார். அப்போது ஒரு சில படங்களை வாங்கி விநியோகம் செய்து வந்த்தும் குறிப்பிடத்தக்கது.