Bose venkat: நடிகர் போஸ் வெங்கட் திமுகவின் கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவையின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழச்சி தங்கபாண்டியன் கல்வியாளர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டதால், இந்தப் பதவி போஸ் வெங்கட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.
போஸ் வெங்கட் என்பவர் தமிழ் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்பட இயக்கத்தில் ஈடுபடும் பிரபல நடிகர் மற்றும் இயக்குநர். தனது தொழில் வாழ்க்கையில் சின்னத்திரை முதல் பெரிய திரை வரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். மெட்டி ஒலி என்ற தொடரில் நடித்து பெரிய அளவில் ரசிகர்களைப் பெற்றார். இது அவரது தொழிலுக்கு முதல் படியாக அமைந்தது.
25
தவெக தலைவர் விஜய்
இந்நிலையில், சினிமாவில் இருந்தாலும் திமுகவின் தீவிர ஆதரவாளராக அறியப்படுபவர். சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் திமுகவுக்கு ஆதரவாக பரப்புரையும் மேற்கொண்டார். திமுகவை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து வந்தார். சமீபத்தில் தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்திருந்தார். விக்கிரவாண்டி மாநாட்டில் தவெக தலைவர் விஜய் சிறுபான்மை, பெரும்பான்மை, மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என மக்களை ஏமாற்றுகிறீர்கள். பிளவுவாத அரசியல் செய்பவர்கள் எதிரி, திராவிட மாடல் என்ற பெயரில் இருக்கும் குடும்ப சுயநலக் கூட்டம் தான் அரசியல் எதிரி, திராவிடத்தையும், தமிழ் தேசியமும் மண்ணின் இரு கண்கள் என கூறினார்.
35
போஸ் வெங்கட்டுக்கு முக்கிய பதவி
இதற்கு நடிகரும், திமுக ஆதரவாளருமான போஸ் வெங்கட் யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்.. என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் திமுகவில் போஸ் வெங்கட்டுக்கு முக்கிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில்: திமுக கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத் தலைவர் முனைவர் தமிழச்சி தங்க பாண்டியன் அவர்கள் கல்வியாளர் அணிச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த காரணத்தால் அவருக்குப் பதிலாக போஸ் வெங்கட், (10-பி, கான்சப்ட்ஸ், ரத்னா நகர், விருகம்பாக்கம், சென்னை-600092) திமுக கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை துணைத் தலைவராக தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
55
போஸ் வெங்கட் நன்றி
இதற்கு போஸ் வெங்கட் நன்றி தெரிவித்துள்ளார். அதாவது திராவிட முன்னேற்ற கழக கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத் தலைவராக பணியாற்ற எனக்கு வாய்ப்பு வழங்கிய தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், கழக இளைஞர் அணி செயலாளர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அன்பு சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் எங்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கும் மற்றும் அனைத்து கழக நிர்வாகிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.