வானிலை மையம் அலர்ட்.! வட தமிழகத்தில் வெப்ப அலை வீசும்... வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்லியஸ் அதிகரிக்கும்

First Published Apr 7, 2024, 3:20 PM IST

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.  இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வெப்ப நிலை அதிகரிக்கும் என்றும் வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வீட்டில் இருந்து மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கின்றனர். இந்தநிலையில் வெயிலின் தாக்கம் தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 07.04.2024: தமிழகம், புதுவை நிலவக்கூடும். மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

08.04.2024 09.04.2024: தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வறண்ட வானிலை நீடிக்கும்

10.04.2024 மற்றும் 11.04.2024: தென் தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
 

Latest Videos


அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலையில் மாற்றம் ஏதுமில்லை. அதற்கு அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2°3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
 

அதிகரிக்கும் வெப்பநிலை

07.04.2024 முதல்  11.04.2024 :

அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 40° 41° செல்சியஸ்,

உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38°-40° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34*-37° செல்சியஸ் இருக்கக்கூடும்.

08.04.2024 முதல் 11.04.2024 வரை; அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக தமிழகத்தில் 2° - 3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
 

ஈரப்பதம் நிலவரம் என்ன.?

07.04.2024 முதல்  11.04.2024 :

அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும்
கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!