சேலத்தில் வாக்கிங் போதே ஓட்டு வேட்டையில் ஸ்டாலின்! முதல்வருடன் ஆர்வத்துடன் செல்பி எடுத்த பொதுமக்கள்!

First Published | Mar 30, 2024, 10:03 AM IST

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக சென்று திமுக சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செல்வ கணபதிக்கு வாக்கு சேகரித்தார்.

lok sabha election 2024

தமிழகத்தில் முதற்கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வ கணபதி மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்து இன்று பெத்தநாயக்கன்பாளையத்தில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

Salem

இதனை ஒட்டி நேற்று மாலை தருமபுரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்டத்தில் பங்கேற்று விட்டு சேலம் வந்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை சேலம் சின்ன கடைவீதி பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டார். 


CM Stalin

அப்போது சின்ன கடை வீதியில் நடைபயிற்சி மேற்கொண்ட அவர் வழிநெடுகிலும் உள்ள சாலையோர வியாபாரிகளை சந்தித்து திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். அப்போது சாலையில் இருந்த வியாபாரிகள்  மற்றும் பொதுமக்கள் ஓடி வந்து ஆர்வத்துடன் ஆதரவு தெரிவித்து செல்பி எடுத்துக் கொண்டனர். 

MK Stalin

மேலும் பொதுமக்களின் குறைகளையும் பொறுமையாக கேட்டுச் சென்றார். சேலம் சின்ன கடை வீதி  ராஜகணபதி கோயில்  இரண்டாவது அக்ரகாரம்  வழியாகச் சென்று தனது நடைப்பயிற்சி முடித்துக் கொண்டு புறப்பட்டார். நிகழ்ச்சியில் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் டி.எம். செல்வ கணபதி வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்,

Latest Videos

click me!