தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? தென் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு இதோ

First Published | Oct 4, 2024, 12:53 PM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக, சென்னை தாம்பரத்திலிருந்து கொச்சுவெளிக்கு வாராந்திர குளிர்சாதன சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மொத்தம் 12 சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

விஷேச நாட்களில் சொந்த ஊர் பயணம்

சொந்த ஊரில் வேலை இல்லாத காரணத்தால் லட்சக்கணக்கான மக்கள்,  தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் வேலைக்காக சென்றுள்ளனர். அந்த வகையில் ஏதேனும் விசேஷ நாட்கள் அல்லது தொடர் விடுமுறை நாட்களில் மட்டுமே தங்களது சொந்தங்களை பார்ப்பதற்காக ஊருக்கு செல்வார்கள்.

சென்னையில் இருந்து மட்டும் பார்க்கும் பொழுது பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகை தினத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேருந்து, ரயில் மற்றும் சொந்த வாகனங்களில் தங்களது ஊர்களுக்கு கடந்த ஆண்டு சென்றுள்ளனர். எனவே இந்தாண்டும் தீபாவளி பண்டிகைக்காக லட்சக்கணக்கான மக்கள் வெளியூர் செல்லதிட்டமிட்டுள்ளனர்.

தீபாவளிக்கு சிறப்பு ரயில்

அந்த வகையில் தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருகிறது.  எனவே தமிழக அரசு வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால் ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட தயாராகி வருகின்றனர்.  அந்த வகையில் பொதுமக்களின் வசதிக்காக சென்னையிலிருந்து மட்டுமல்ல தமிழகத்தில் இருந்து பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இதே போல சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்படும். ரயில்வேயை பொறுத்தவரை 120 நாட்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிடும். எனவே கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாகவே அனைத்து ரயில்களிலும் தீபாவளி ரயில் டிக்கெட்டுகள் நிரம்பி விட்டன. எனவே ரயில்வே துறை  சிறப்பு ரயில் அறிவிக்கப்படுமா என பொதுமக்கள் காத்திருந்தனர்

Tap to resize

திருச்சி, மதுரை, தென்காசிக்கு ரயில்

எனவே அவர்களுக்காக தற்போது குட் நியூஸ் ஒன்று வெளியாகி உள்ளது.  அந்த வகையில்
சென்னை தாம்பரத்தில் இருந்து கொச்சுவெளிக்கு வாராந்திர குளிர்சாதன சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் எண் 06035 / 06036 இந்த ரயில் தாம்பரத்திலிருந்து கொச்சுவேலிக்கு இரவு 7.30  மணிக்கு ஆனது புறப்படுகிறது.அக்டோபர் மாதத்தில் 11, 18, 25 ஆம் தேதிகளில் இயக்கப்படுகிறது. இதே போல  நவம்பர் மாதத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. மொத்தமாக 12 ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல கொச்சுவேலியில் இருந்து தாம்பரத்திற்கும் வாராந்திர சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது.  இந்த ரயில் கொச்சிவேலியில் இருந்து மதியம் 3:25 மணிக்கு புறப்படுகிறது.

முன்பதிவு தொடங்கியது

அடுத்த நாள் காலை 7 40 மணிக்கு சென்னை தாம்பரத்தை வந்து அடைகிறது. இந்த சிறப்பு ரயிலில் 14 ஏசி வகுப்பு பெட்டிகளும், 2சரக்கு பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருச்சி, மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, செங்கோட்டை வழியாக கொல்லம் சென்று அங்கிருந்து  கொச்சிவேலியை சென்று சேருகிறது.  இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது
 

Latest Videos

click me!