பள்ளி ஆசிரியர்களுக்கு குஷியோ குஷி.! சூப்பர் திட்டத்தை அறிவித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை

First Published | Oct 20, 2024, 11:56 AM IST

தமிழக அரசு சார்பாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் ஆசிரியர்களுக்கான சூப்பர் திட்டங்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாணவர்களும் ஆசிரியர்களும்

தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாகவும், அதைவிட அதிகளவும் மதிப்பெண்கள் பெற பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் 10வது மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற பல்வேறு ஊக்கமும் வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இலக்கிய மன்றம், சிறார் திரைப்பட மன்றம், வானவில் மன்றம், வினாடி வினா மன்றம் செயல்படுத்தி வருகிறது. அந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் அழைத்து செல்லப்படுகிறது. 

மாணவர்கள் வெளிநாடு சுற்றுலா

அந்த வகையில் போட்டிகளில் வென்ற மாணவர்கள் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனையடுத்து அடுத்த குழு மாணவர்கள் ஜப்பானுக்கு சுற்றுபயணம் அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் மாணவர்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பது ஆசிரியர்களாகும். எனவே அந்த ஆசிரியர்கள் இல்லையென்றால் மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றவும், கல்வியறிவும் பெறமுடியாத நிலை நீடிக்கும். மாதா, பிதா, குரு,தெய்வம் என வரிசையாக கூறுவார்கள்.

அந்த வகையில் மாணவர்களின் கல்வியறிவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆசிரியர்களை தமிழக அரசு கவுரவித்து வருகிறது.மத்திய மற்றும் மாநில அரசுகள் நல்லாசிரியர் விருதும் அறிவித்து குடியரசு தலைவர் கையால் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசு சார்பாகவும் சிறந்த ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டி வருகின்றனர். 

Tap to resize

school teacher


அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடு சுற்றுலா

அந்த வகையில் மாணவர்களை மட்டுமே வெளிநாடு சுற்றுலாவிற்கு அழைத்து சென்ற பள்ளிக்கல்வித்துறை இந்த முறை ஆசிரியர்களை வெளிநாடு சுற்றுலாவிற்கு அழைத்து செல்லவுள்ளது.  தமிழகம் முழுவதும் கனவு ஆசிரியர் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 34 தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி மற்றும் 22 உயர்நிலை மேல்நிலை பள்ளி என 54 ஆசிரியர்கள் வருகிற 23ஆம் தேதி காலை சென்னையிலிருந்து புறப்பட்டு 28ஆம் தேதி வரை பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இதுவரை கலைத்திருவிழா மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் முதன்முறையாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர்கள் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

பிரான்ஸ் கல்வி நிலையங்களுக்கு சுற்றுலா

இது தொடர்பான நிகழ்வு திருச்சியில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் ஆசிரியர்களை சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம் முதல் முறையாக மாணவனாகிய நான் ஆசிரியர்களை சுற்றுலா அழைத்துச் செல்வது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என தெரிவித்தார். பிரான்ஸ் நாட்டின் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டு, பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள கனவு ஆசிரியர்களை இன்று சந்தித்து கலந்துரையாடி வாழ்த்துகள் தெரிவித்ததாக கூறினார். 

நடைமுறைப்படுத்தி 60 ஆசிரியர்கள் வெளிநாடு பயணம்

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பொழுது ஆசிரியர் சார்ந்து பல்வேறு திட்டங்களை வருகிறோம். அதன் ஒரு பகுதியாக அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அங்கீகாரம் செய்யும் விதமாகவும் முதல் முறையாக ஆசிரியர்களை வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்ல உள்ளோம். தொடக்கக்கல்வி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியை சார்ந்த ஆசிரியர்கள், அதிகாரிகள்  உள்ளிட்ட 60 பேர் பிரான்ஸ் நாட்டிற்கு சென்று கல்வி சார்ந்த, வரலாற்று சார்ந்த சுற்றுலா இடங்களை பார்க்க உள்ளதாக தெரிவித்தார். இந்த திட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என கூறினார். 

Latest Videos

click me!